ஒரே நாளில் இரண்டு படங்கள் ரிலீஸ்: ரிஸ்க் எடுக்கிறாரா சந்தானம்?

Published on: January 11, 2020
---Advertisement---

b49b7790d06482f3a07b75f0c0d688d1-2

நடிகர் சந்தானம் காமெடி நடிகராக இருந்தபோது அவர் நடித்த திரைப்படங்கள் ஒரே நாளில் இரண்டுக்கும் மேற்பட்ட திரைப்படங்கள் வெளியாவது என்பது சர்வ சாதாரண நிகழ்வாக இருந்தது. ஆனால் தற்போது அவர் ஹீரோவாக மாறி விட்ட பின்னர் வருடத்திற்கு ஒன்று அல்லது இரண்டு படங்கள் மட்டுமே வெளிவந்து கொண்டிருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது உதாரணமாக கடந்த ஆண்டு அவர் நடித்த ’தில்லுக்கு துட்டு 2’ மற்றும் ’ஏ1’ஆகிய இரண்டு படங்கள் மட்டுமே வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது 

இந்த நிலையில் சந்தானம் நடித்த ’டகால்டி’ என்ற திரைப்படம் ஜனவரி 31ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது; இதனை உறுதி செய்யும் வகையில் நேற்று ரிலீஸ் தேதியுடன் குறித்த போஸ்டர் ஒன்றும் வெளியானது 

இந்த நிலையில் இன்று காலை திடீரென அவர் நடித்த ’சர்வர் சுந்தரம்’ என்ற திரைப்படமும் அதே ஜனவரி 31ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரே நாளில் இரண்டு படங்களை ரிலீஸ் செய்து சந்தானம் ரிஸ்க் எடுக்கின்றாரோ? என்ற எண்ணம் ஏற்பட்டாலும் கடைசி நேரத்தில் ஒரு இந்த இரண்டு படங்களில் ஒன்றின் ரிலீஸ் தேதி மாற்றி அமைக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது

Leave a Comment