திருமணமாகி இரண்டு குழந்தைகள்;பள்ளி மாணவியோடு காதல்-சிக்கிய பாமக பிரமுகர்!
பாமகவைச் சேர்ந்த வட்டச்செயலாளர் ஒருவர் பள்ளி மாணவியோடு காதல் புரிந்து தலைமறைவானதை அடுத்து போக்ஸோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை, டிபி சத்திரத்தை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் சத்யா. இவர் நண்பர்களால் ’ஆட்டோ சத்யா’ என அழைக்கப்பட்டு வருகிறார். அரசியலில் ஈடுபாடு கொண்ட இவர் பாமகவின் 102 ஆவது வட்டச்செயலாளராக இருந்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ளன.
இந்நிலையில் அண்ணா நகரில் உள்ள பள்ளி மாணவி ஒருவரை ஆசை வார்த்தைக் காட்டி காதல் வலையில் வீழ்த்தியுள்ளார். இருவரும் சேர்ந்து வாழ ஆசைப்பட்டு கடந்த 27 ஆம் தேதி தலைமறைவாகியுள்ளனர். இதையடுத்து சம்மந்தப்பட்ட மாணவியின் தாயார், காவல் நிலையத்தில் புகார் அளிக்க, அவரை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளது போலிஸ். பாதிக்கப்பட்ட மாணவியை மீட்டு அவரை பெற்றொரிடம் ஒப்படைத்துள்ளது.
மாணவி அவரைக் காதலித்து இருந்தாலும் அவர் மைனர் பெண் என்பதால் அவரைக் கடத்திசென்றதால் ஆட்டோ சத்யாவின் மேல் போக்ஸோ சட்டம் பாய்ந்துள்ளதாக சொல்லப்படுகிறது.