வலிமை, அண்ணாத்த, அரண்மனை 3! - சினிமாவில் மீண்டும் தலை தூக்கும் அரசியல்

by adminram |

8279010370439d62761d01940ec52983-3

திமுக ஆட்சியில் இருக்கும் போது திரைத்துறையில் உதயநிதி ஸ்டாலின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் மற்றும் சன் பிக்சர்ஸ் ஆகியோரின் தலையீடு அதிகரிக்கும் என பொதுவாகவே கூறப்படுவதுண்டு. முக்கிய திரைப்படங்களை வினியோகிக்கும் உரியமை உதயநிதி தனது ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் மூலம் வாங்கி வெளியிடுவார். அதேபோல், சன் பிக்சர்ஸ் நிறுவனம் பல பெரிய படங்களின் தொலைக்காட்சி உரிமையை பேரம் பேசி வாங்கி வெளியிடுவார்கள். ஒரு பக்கம் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பிலும் ஈடுபடும்.

4194da7d21d499d193c5d4062ffe74d7-2

தற்போது அது மீண்டும் தலை தூக்க துவங்கியுள்ளது. வலிமை, அண்ணாத்த, அரண்மனை 3 ஆகிய படங்களை அதிக ஏரியாக்களில் வினினோகம் செய்யும் உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ‘ரெட் ஜெயண்ட்’ நிறுவனம் பெற்றுள்ளது.மேலும், பல திரைப்படங்களை அவர் தயாரிக்க திட்டமிட்டிருப்பதாகவும், சில திரைப்படங்களை வாங்கி வெளியிட அவர் முடிவெடுத்திருப்பதாகவும் செய்திகள் கசிந்துள்ளது.

Next Story