அசிங்கப்படுத்திய படக்குழு – அவமானத்தில் வெளியேறிய நடிகை

மலையாளம் மற்றும் தமிழ் திரைப்படங்களில் நடித்து வருபவர் நடிகை ரம்யா நம்பீசன். இவர் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக   ‘தமிழரசன்’ படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடந்தது.

இந்த விழாவில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், வானதி சீனிவான் உள்ளிட்ட பாஜக பிரபலங்கள் கலந்து கொண்டனர். இதனால், இந்த விழாவில் கலந்து கொண்ட ரம்யா நம்பீசனை படக்குழு சரியாக கவனிக்கவில்லையாம். மேலும், விழா மேடைக்கு கூட கடைசியாக அழைக்கப்பட்ட அவர் பின் வரிசையில் அமர வைக்கப்பட்டாராம். 

இதை அவமானமாக கருதிய ரம்யா நம்பீசன் விழாவில் இருந்து பாதியிலேயே வெளிநடப்பு செய்துவிட்டாராம். 

Published by
adminram