இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு கொரோனா தொற்று இருக்கும் நிலையில் இப்போது அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கொரோனாவால் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் இங்கிலாந்தும் ஒன்று. அங்கு மிகவேகமாகப் பரவி வரும் வைரஸால் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளனர். அங்கு இதுவரை 47,000 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 4900 பேருக்கு மேல் இறந்துள்ளனர்.
இந்நிலையில் அந்த நாட்டின் இளவரசர் மற்றும் பிரதமர் போரிஸ் ஜான்சன் ஆகிய இருவருக்குமே கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொண்ட போரிஸ் ஜான்சன், வீடியோ கான்ப்ரன்சிங் மூலமாக பணிகளை மேற்பார்வையிட்டார்.
இந்நிலையில் அவரது உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதால இப்போது லண்டனில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த செய்தியானது அந்த நாட்டு மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மாரி செல்வராஜ்…
Dhanush: தனுஷ்…
Jayam Ravi: சினிமாவில்…
Sun serials:…
நடிகர் சூர்யாவும்…