வீட்டுக்குள் இருந்து தாங்க முடியாத துர்நாற்றம் – திறந்து பார்த்த உறவினர்களுக்கு அதிர்ச்சி!

உத்தர பிரதேச மாநிலத்தில் ஒரே வீட்டைச் சேர்ந்த 5 பெண்கள் அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

உத்தர பிரதேச மாநிலம் ஃபதேபூர் பகுதியில் இருக்கும் அந்த வீடு சில நாட்களாகப் பூட்டிக் கிடந்துள்ளது. அக்கம்பக்கத்தினரும் உறவினர்களும் எங்காவது வெளியூர் சென்றிருப்பார்கள் என நினைத்துள்ளனர். ஆனால் சில நாட்களிலேயே அந்த வீட்டில் இருந்து தாங்க முடியாத துர்நாற்றம் வீச துவங்கியுள்ளது.

இதனையடுத்து அக்கம்பக்கத்தினர் போலீஸாருக்குத் தகவல் சொல்ல வீட்டை உடைத்து திறந்து பார்த்த போது அந்த வீட்டைச் சேர்ந்த 5 பெண்களும் அழுகிய நிலையில் சடலமாகக் கிடந்துள்ளனர். சடலங்களைக் கைப்பற்றி போலீஸார் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர். மேலும் தலைமறைவாகியுள்ள அவரது கணவர் மேல் சந்தேகப்பட்டு அவரைத் தேடி வருகின்றனர்.

சில தினங்களுக்கு முன் வீட்டில் கணவருக்கும் அந்த பெண்களுக்கும் இடையே சண்டை ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

Published by
adminram