">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
போக்குவரத்து தடை நீக்கம் – மத்திய உள்துறை அமைச்சகம்!
கொரோனா ஊரடங்கினாள் பேருந்துகள் கடந்த 6 மாத காலமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தற்ப்போது ஊரடங்கில் இருந்து சற்று தளர்வு ஏற்பட்டுள்ளதால் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்ப மத்திய, மாநில அரசுகள் நடிவடிக்கை எடுத்து வருகிறது.
அந்த வகையில் தற்போது மாநிலங்களுக்கிடையிலான போக்குவரத்துக்கு தடை வேண்டாம் என்று அந்தந்த மாநிலங்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் மீண்டும் கடிதம் எழுதியுள்ளது. அதில், மாநிலங்களுக்குள்ளும், மாநிலங்களுக்கு வெளியேயும் செல்ல இ பாஸ் தேவையில்லை என்று திட்டவட்டமாக கூறியுள்ளது.
மேலும், மாநில அரசுகளின் செயல்பாடுகளினால் சரக்கு போக்குவரத்து தடைபடுவதாக மத்திய அரசு கவலை தெரிவிக்கிறது. இதனால் வேலைவாய்ப்பு தடைபட்டு பொருளாதாரம் பாதிக்கப்படுவதாகவும் மத்திய அரசு வேதனை தெரிவித்து, மாநில அரசின் கட்டுப்பாடுகள் வழிகாட்டு நெறிமுறைகளுக்கு முரணானது என்றும் அந்த கடிதத்தில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.