கேரளாவில் திருடப் போன வீட்டில் இருந்த பொருட்களைப் பார்த்து பயந்த திருடன் கடிதம் எழுதி வைத்துவிட்டு தப்பித்து சென்றுள்ளான்.
கேரள மாநிலம் திருவாங்குளம் பகுதியில் உள்ள ஒரு வீட்டுக்கு திருடப் புகுந்துள்ளான். பூட்டியிருந்த வீட்டை உடைத்து உள்ளே சென்ற அவனுக்கு ஆச்சர்யமும் அதிர்ச்சியும் சேர்ந்து கிடைத்துள்ளது. அங்கிருந்த பொருட்கள் மற்றும் புகைப்படங்களை பார்த்த அந்த திருடன் அது ராணுவ வீரரின் வீடு என்பதைக் கண்டு பிடித்துள்ளான்.
இதனால் பயந்து போன திருடன் ஒரு கடிதத்தை எழுதிவைத்து விட்டு எந்த ஒரு பொருளையும் திருடாமல் சென்றுள்ளான். அந்த கடிதத்தில் ‘இந்த வீடு ராணுவ வீரரின் வீடு என தெரியாமல் உள்ளே நுழைந்து விட்டேன். பைபிளின் ஏழாவது கட்டளையை மீறி தவறு செய்து விட்டேன். என்னை மன்னித்து விடுங்கள்’ என எழுதி வைத்துவிட்டு சென்றுள்ளான்.
இது சம்மந்தமாக வீட்டு உரிமையாளர்கள் போலீஸில் புகார் கொடுக்க திருடனைப் பிடிக்க போலீஸார் முனைப்புக் காட்டி வருகின்றனர்.
சிவகார்த்திகேயன் தனுஷ்…
Devi Sri…
நடிகை ஸ்ரீலீலா…
Tamil Biggboss: பிக்பாஸ்…
Biggboss Tamil:…