இசைஞானி இசையில் மனதை உருக்கும் ‘உன்ன நெனச்சி’ – சைக்கோ பட பாடல் வீடியோ

மிஷ்கின் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள திரைப்படம் சைக்கோ. இப்படத்தில் இயக்குனர் ராம், அதிதி ராவ், நித்யா மேனன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தின் பாடல்களின் ஆடியோ ஏற்கனவே வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

குறிப்பாக ‘சித் ஸ்ரீராம்’ பாடியுள்ள ‘உன்ன நெனச்சி’ பாடல் மனதை உருக்கும் படி அமைந்துள்ளதாக நெட்டிசன்கள் பலரும் சமூக வலைத்தளங்களில் கூறி வருகின்றனர்.

இந்நிலையில், அப்பாடலின் முழு வீடியோவை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.

Published by
adminram