உன்னாவ் பாலியல் வழக்கு: எம்எல்ஏ செங்காருக்கு தண்டனை அறிவிப்பு

Published On: December 20, 2019
---Advertisement---

837a8c084c0db6b99873a668380f74ca

உன்னாவ் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் குற்றவாளி குல்தீப்சிங் செங்காருக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.25 லட்சம் அபராதம் விதித்து டெல்லி தீஸ் ஹசாரி நீதிமன்றம் தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளது

உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள உன்னாவ் மாவட்டத்தில் கடந்த 2017அம் ஆண்டு தன்னிடம் வேலை கேட்டு வந்த 17 வயது சிறுமியை முன்னாள் பாஜக எம்எல்ஏ குல்தீப் சிங் செங்காரால் என்பவர் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பெண்ணின் குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்தனர்.

இதனையடுத்து எம்எல்ஏ குல்தீப் சிங்கை கைது செய்த போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதனால் குல்தீப் சிங் பாஜகவில் இருந்து நீக்கப்பட்டார். சிபிஐக்க்கு மாற்றப்பட்ட இந்த வழக்கின் விசாரணை டிசம்பர் 9ம் தேதி நிறைவு பெற்றதை அடுத்து சமீபத்தில் தீர்ப்பு அளிக்கப்பட்டது. அதில் குல்தீப்சிங் செங்கார் குற்றவாளி என அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் சற்றுமுன் குற்றவாளி குல்தீப்சிங் செங்காருக்கு ஆயுள் தண்டனையும் ரூ.25 லட்சம் அபராதம் விதித்து தீர்ப்பின் தண்டனை விபரம் குறித்து அறிவிக்கப்பட்டது.

Leave a Comment