இந்த நிலையில் அதே தேதியில் சூர்யா நடித்த ’சூரரைப்போற்று’ திரைப்படம் ரிலீஸ் ஆகும் என செய்திகள் வெளியானது. இருப்பினும் ’சூரரைப்போற்று’ திரைப்படம் மிக சிறப்பாக வந்துள்ளதாகவும் இதனால் அதிக திரையரங்குகளில் ரிலீஸ் செய்ய சூர்யா விரும்பியதாகவும் அதனால் ’மாஸ்டர்’ படத்துடன் மோதினால் அதிக திரையரங்குகள் கிடைக்க வாய்ப்பில்லை என்பதால் இந்த படத்தின் ரிலீஸ் தேதியை ஒரு வாரம் தள்ளி வைக்க சூர்யா முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது
இதனையடுத்து தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி ’சூரரைப்போற்று’ திரைப்படம் ஏப்ரல் 16ஆம் தேதி அதாவது ’மாஸ்டர்’ வெளியான ஒரு வாரம் கழித்து வெளியாகும் என தெரிகிறது. ’மாஸ்டர்’ ’சூரரைப்போற்று’ இரண்டும் ஒரே நாளில் மோதினால் மாஸ்டர் படத்துக்கு இணையாக சூரரைப்போற்று படத்திற்கும் தியேட்டர் கிடைத்தாலும் பெரிய ஸ்க்ரீன்கள் எதுவுமே சூரரைப்போற்று படத்திற்கு கிடைக்காது என்பதால் இந்த அதிரடி மாற்றம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது
’சூரரைப்போற்று’ திரைப்படத்தை தமிழகம் முழுவதும் சுமார் 600 திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் சுமார் 800 திரையரங்குகளில் வெளியாகும் மாஸ்டர் படம் அடுத்த வாரமே பல திரையரங்குகளில் இருந்து தூக்கப்படுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்
Rashmika: புஷ்பா…
இயக்குனர் ஷங்கர்…
எம்ஜிஆருக்கு அடுத்தபடியாக…
அரை நூற்றாண்டுகளாகத்…
தமிழ் சினிமாவில்…