வந்ததும் வாய்ச்சதும்…! மேடையில் உளறிய மோடியும் டிரம்பும்.. வைரலாகும் வீடியோ

அங்கு உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமான மோதேரா மைதானத்திற்கு சென்று ‘நமஸ்தே டிரம்ப்’ என்கிற நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டார். ஆனால், டிரம்ப் உரையாற்றிக்கொண்டிருந்த போதே பொதுமக்கள் பலரும் அவரை அவமதிப்பது போல் அங்கிருந்து வெளியேறினர்.  இந்த வீடியோ ஏற்கனவே நெட்டிசன்கள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

இந்நிலையில், பிரமதர் மோடி மேடையில் பேசும்போது டொனால்ட் டிரம்ப் என்பதற்கு பதிலாக ‘டோலாண்ட் டம்ப்’ என உச்சரித்தார். அதேபோல், டிரம்ப் பேசும் போது ‘சுவாமி விவேகானந்தா’ என்பதற்கு பதில் ‘சாமி விவே கமுன்னட்டு’ என உச்சரித்தார். இந்த வீடியோவை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து ‘வந்ததும் வாய்ச்சதும்’ என நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர்.

Published by
adminram