More

ஈரானுக்கு பதிலடி கொடுக்காமல் பின்வாங்கிய அமெரிக்கா: காரணம் இதுதான்

ஈராக்கில் உள்ள அமெரிக்காவின் படைகள் மீது சமீபத்தில் ஈரான் அதிரடியாக ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியதில் சுமார் 80 அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதையும் அமெரிக்கா அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது 

Advertising
Advertising

இருப்பினும் இந்த தாக்குதலுக்கு அமெரிக்கா விரைவில் பதிலடி கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது அமெரிக்க அமைதியாக இருப்பது பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக அமெரிக்காவிலுள்ள பலர் ஈரான் மீதான தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதே அமெரிக்கா பின்வாங்கியது காரணம் என்று கூறப்படுகிறது 

அதிபர் டிரம்பின் சொந்த கட்சியினரே ஈரான் மீது தாக்குதல் நடத்த எதிர்ப்பு தெரிவித்ததாகவும் மேலும் இந்த ஆண்டு இறுதியில் அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இந்த தாக்குதல் தேவையில்லை என்று முடிவு செய்ததாக கூறப்படுகிறது 

அதுமட்டுமின்றி ட்ரம்ப் பிறப்பிக்கும் உத்தரவை மதிக்க பெண்டகன் கூட தயாராக இல்லை என்றும் கூறப்படுகிறது. ஈரான் மீது தாக்குதல் நடத்த பெண்டகனுடன் டிரம்ப் ஆலோசனை செய்த போது ஈரான் மீதான தாக்குதல் தேவையில்லை என்று பென்டகன் அதிகாரிகள் தெரிவித்ததாகவும் இதனால்தான் ஈரான் மீதான தாக்குதலில் இருந்து அமெரிக்கா பின்வாங்கிவிட்டதாகவும் கூறப்படுகிறது

Published by
adminram

Recent Posts