ஊரடங்கு அறிவிக்கப்பட்டு இன்று மூன்றாவது நாளாகியுள்ளது. இந்நிலையில் மக்கள் அனைவரும் தங்கள் வீடுகளிலேயே இருப்பதால் அதிகளவில் செல்போன்களைப் பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர். அதுமட்டுமில்லாமல் பலரும் வீடுகளில் இருந்து வேலை செய்வதால் அதிகளவில் மொபைல் டேட்டாவை சார்ந்துள்ளனர்.
இந்நிலையில் செல்போன் நிறுவன கூட்டமைப்பின் இயக்குனர் ராஜன் மேத்யூஸ் கூறுகையில் ”கடந்த சில வாரங்களில் மொபைல் டேட்டா பயன்பாடு 20 முதல் 30 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. இது இன்னும் அதிகமானால் மொபைல் டேட்டா வேகம் குறையும். இதனால் வீட்டிலிருந்து பணி புரியும் ஊழியர்கள் பாதிக்கப்படுவார்கள். அதனால் மக்கள் மொபைல் டேட்டாவை சிக்கனமாக உபயோகப்படுத்துங்கள்” என அறிவுறுத்தியுள்ளார்.
Jayam ravi:…
Pushpa2: தென்னிந்தியா…
நடிகர் தனுஷுக்கு…
ரஜினி, விஜய்…
Keerthi suresh:…