அண்ணா!.. வேற மாறி….சம்பவம்… வெளியானது ‘வாடிவாசல்’ டைட்டில் லுக்…

அசுரன் திரைப்படத்திற்கு பின் சூர்யாவும் – வெற்றி மாறனும் ‘வாடிவாசல்’ படத்தில் இணைவதாக சில மாதங்களுக்கு முன்பே செய்திகள் வெளியானது.  இப்படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்க, ஜி.வி.பிரகாஷ் இசையமைப்பதாக அறிவிக்கப்பட்டது. அதோடு ‘வாடிவாசல்’ ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரும் வெளியானது. ஆனால், படப்பிடிப்பு துவங்கப்படவில்லை. 

வெற்றிமாறன் ஒருபக்கம் சூரி, விஜய் சேதுபதியை வைத்து ‘விடுதலை’ படப்பிடிப்பு துவங்கினார். அதேபோல், சூர்யாவும் சூரரைப்போற்று திரைப்படத்திற்கு பின் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிக்க சென்றுவிட்டார். எனவே வாடிவாசல் படம் துவங்கப்படுமா என்கிற சந்தேகம் எழுந்தது.

ஆனால், திடிரென ‘வாடிவாசல்’ திரைப்படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் இன்று மாலை 5.30 மணிக்கு வெளியாகும் என இப்படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு நேற்று அறிவித்தார். அதன்படி தற்போது வாடிவாசல் டைட்டில் லுக் போஸ்டர் தற்போது வெளியாகி சூர்யா ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

இதைப்பார்த்த சூர்யா ரசிகர்கள் ‘அண்ணா!.. வேற மாறி….சம்பவம்…’ என பதிவிட்டு வருகின்றனர்.

Published by
adminram