வடிவேலுக்கு இப்படி செஞ்சா பிடிக்கவே பிடிக்காதாம்... என்ன முடிவெடுப்பாருன்னு தெரியுமா? அடேங்கப்பா...!
தமிழ்ப்பட உலகில் நகைச்சுவை ஜாம்பவானாக வலம் வந்தவர் வைகைப்புயல் வடிவேலு. இவர் நடிக்கும் படங்கள் என்றாலே அதற்கென்று தனி ரசிகர்கள் கூட்டம் போகும். ஹீரோ ஹீரோயினைக் கேட்குறாங்களோ இல்லையா முதல்ல படத்துல காமெடி யாருன்னு தான் கேட்பாங்க.
வடிவேலுன்னா போதும். தியேட்டருக்குப் போயிடுவாங்க. அப்படி ஒரு காலம் இருந்தது. அப்புறம் அவர் சர்ச்சையில சிக்கினதுக்கு அப்புறம் தான் புதுசு புதுசா காமெடியர்கள் வந்தாங்க. காமெடிங்கற பேருல நிறைய மொக்கைகள் தான் வெளியே வந்தன.
வடிவேலு அந்த சமயத்தில் தான் மீம்ஸ் கிரியேட்டராக சமூக வலை தளங்களில் வலம் வர ஆரம்பித்தார். அப்போது தான் வடிவேலு இம்புட்டு டயலாக் பேசியிருக்காரான்னு எல்லாம் வெளியே தெரிந்தது. இவரது ஒவ்வொரு காமெடி பஞ்ச்களும் பட்டையைக் கிளப்பின. அது எந்த சூழ்நிலையிலும் பயன்படுத்தும் வகையில் இருந்தன.
இப்படி ஒரு நடிப்பை இவரைத் தவிர வேறு யாரும் நடித்ததே இல்லை என்றே சொல்லலாம். ஏன்னா நகைச்சுவை நடிகர்களில் அதிகளவில் மீம்ஸ்களைக் கொண்டு வந்தது வடிவேலு தான். அதனால் அவரை மீம்ஸ் கிரியேட்டர்னே சொல்வாங்க. அவரைப் பற்றி சமீபத்தில் அவருடன் ஜோடியாக நடித்த பிரியங்கா என்ற நடிகை சில கருத்துகளைத் தெரிவித்துள்ளார். என்னன்னு பார்ப்போம்.
வடிவேலுவுடன் நடிக்கும்போது நாம் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும். ஏன்னா அவர் செய்யும் காமெடிகள் நமக்கு உடனே சிரிப்பு வந்து விடும். மீறி வடிவேலு காமெடிக்கு சிரிச்சா போச்சு. உள்ள வேலையையும் பறிகொடுத்துட்டு நிக்க வேண்டியதுதான். அப்படி பல பேர் வாய்ப்புகளை இழந்துருக்காங்க. சிரிக்காம நடிக்க முடியும்னா வடிவேலுவோட நடிக்கலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
வடிவேலுவைப் பொருத்த வரை இன்னொரு விஷயமும் பரவலாக சொல்வதுண்டு. இவரை விட சூப்பரா யாராவது நகைச்சுவையாக நடித்தால் அவரைத் தன்னுடன் வைத்துக் கொள்ள மாட்டாராம். இவரை வளர்த்து விட்ட இயக்குனர் வி.சேகர் தான் என்பது குறிப்பிடத்தக்கது.