காமெடி வெப் சீரியஸில் வடிவேலு – சம்பளம் எவ்வளவு தெரியுமா?

இம்சை அரசன் 24ம் புலிகேசி படத்தின் படப்பிடிப்பில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக அப்படத்திலிருந்து வடிவேலு ஒதுங்கினார். இந்த பஞ்சாயத்து தயாரிப்பாளர் சங்கத்திற்கு செல்ல வடிவேலுவிற்கு ரெட் கார்ட் போட்டுவிட்டனர். எனவே, ஒரு சில படங்களை தவிர எந்த படத்திலும் வடிவேலு நடிக்கவில்லை.

அதேநேரம், தேவர்மகனின் 2ம் பாகம் எனக்கூறப்படும் தலைவன் இருக்கிறான் திரைப்படத்தில் வடிவேலு நடிக்கவிருப்பதாக கூறப்பட்டது. ஆனால், இந்தியன் 2, அரசியல் நடவடிக்கைகள், அறுவை சிகிச்சை என கமல்ஹாசன் பிஸியாக இருப்பதால் அப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் தொடங்கவில்லை. அதோடு வேறு படங்களில் நடிக்க பல பஞ்சாயத்துகள் இருப்பதால் டிஜிட்டல் யுகத்தில் கால் பதிக்க வடிவேலு முடிவெடுத்து விட்டார். 

முழுக்க முழுக்க ஒரு காமெடி வெப் சீரியஸில் அவர் நடிக்க உள்ளார் என்கிற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இதற்காக, சினிமாவில் அவர் என்ன சம்பளம் வாங்குவாரோ அதை விட 2 மடங்கு சம்பளம் அவருக்கு வழங்கப்பட உள்ளதாம். இது தொடர்பான அறிவிப்பு வருகிற ஜனவரி மாதம் வெளியாகும் எனத் தெரிகிறது. 

எனவே, வெள்ளித்திரையில் ரசிகர்கள் பார்த்து ரசித்த வடிவேலுவை இனிமேல் கம்ப்யூட்டர், லேப்டாப், செல்போன் ஆகியவற்றில் ரசிகர்கள் பார்த்து ரசிக்கப்போகிறார்கள்.

Published by
adminram