வடிவேலுதான் பிரச்சினை.. பகத் என்ன பண்ணாரு? இப்படி ஒரு சிக்கல் வரும்னு எதிர்பார்க்கல
வடிவேலு - பகத் கூட்டணி: யாருமே எதிர்பார்க்காத கூட்டணி. முதன் முறையாக மாமன்னன் திரைப்படத்தின் மூலம் இணைந்தார்கள். நீண்ட இடைவெளிக்கு பிறகு வடிவேலுவின் காமெடியை பார்க்க போகிறோம் என்ற எதிர்பார்ப்பில் இருந்த ரசிகர்களுக்கு ஒரு பெரும் அதிர்ச்சி இந்தப் படத்தில் காத்திருந்தது. இந்தப் படத்தில் வடிவேலு காமெடியனாக நடிககவில்லை. குணச்சித்திர கேரக்டரில்தான் நடிக்கிறார் என்று.
உதயநிதிக்கு அப்பா: அதுவும் உதய நிதிக்கு அப்பாவாக வடிவேலு. ஆனால் எதிர்பார்ப்பையும் மீறி வடிவேலுவின் நடிப்பு அனைவரின் பாராட்டையும் பெற்றது. இனிமேல் இப்படியே நடிங்க என்று சொல்லுமளவிற்கு அவரின் நடிப்பு இந்தப் படத்தில் அமைந்திருந்தது. கோபப்பட வேண்டிய இடத்தில் கோபம், பாசம் காட்ட வேண்டிய இடத்தில் பாசம் என அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார்.
பெரிய கேப்: அரசியலில் ஜெயலலிதாவை எதிர்த்து பேசிவிட்டார் என்பதற்காக ஒட்டுமொத்தமாக வடிவேலுவை ரவுண்ட் கட்டி சினிமாவில் நடிக்க முடியாதபடி ஆக்கினார்கள். அதன் பிறகு கொரனா லாக்டவுன் என கிட்டத்தட்ட 5 வருடங்கள் இடைவெளிக்கு பிறகு நாய்சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தின் மூலம் ரீ எண்ட்ரி ஆனார் வடிவேலு. ஆனால் முன்பு இருந்த காமெடி இந்தப் படத்தில் அவருக்கு எடுபடவில்லை. அதன் பிறகுதான் மாமன்னன் திரைப்படத்தில் குணச்சித்திர வேடத்தில் நடித்து அசத்தினார்.
மீண்டும் பகத்துடன் கூட்டணி: மாமன்னன் திரைப்படத்திற்கு பிறகு வடிவேலு மீண்டும் பகத்துடன் மாரீசன் என்ற படத்தில் நடித்திருக்கிறார். அந்தப் படமும் வடிவேலுவுக்கு ஒரு முக்கியமான படமாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது. ஆனால் படத்தின் பிசினஸ் சரியாக விற்கப்படவில்லை என்பதுதான் வருத்தம். அதற்கு காரணம் வடிவேலு நடித்த நாய்சேகர் படம்தான்.
ஏனெனில் நாய்சேகர் ரிட்டர்ன்ஸ் படம் வெளியாகி திரையரங்கில் மிகவும் மோசமான தோல்வியை தழுவியது. அதுபோக ஓடிடி அந்தப் படத்தை 10கோடி கொடுத்து வாங்கியிருக்கிறார்கள். ஆனாலும் ஓடிடியிலும் அந்தப் படத்தை யாரும் பார்த்த மாதிரி தெரியவில்லை. அதன் விளைவாகத்தான் இந்த மாரீசன் படத்தின் பிசினஸும் விற்காமல் இழுத்தடிக்கப்படுவதாக இருக்கிறது.
பகத் இருந்தும் இப்படியா?: இருந்தாலும் படத்தில் பகத் பாசிலும் இருக்கிறார். அவருக்காக கூட இந்தப் படம் பிசினஸ் போகும் என்று எதிர்பார்த்த நிலையில் இந்தப் படம் முழுக்க முழுக்க வடிவேலுவுக்காக எடுக்கப்பட்ட படமாக இருக்கும் என்று கோடம்பாக்கத்தில் கூறிவருகிறார்கள். அதனால்தான் வடிவேலுவை நம்பி எப்படி முதலீடு போடுவது என தயங்குகிறார்களாம்.