இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் சிம்பு தேவன் இயக்க நடிகர் வடிவேல் நடித்து ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் 23ம் புலிகேசி. இப்படம் 2006ம் ஆண்டு வெளியானது. இப்படம் சிறியவர் முதல் பெரியவர் வரை எல்லோரையும் சிரிக்க வைத்தது. முழுபடத்திலும் காமெடி காட்சிகள் கொட்டிக்கிடந்தது ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது. எனவே, இப்படம் வசூலை வாரிக்குவித்தது.
அதன்பின் சில வருடங்கள் கழித்து இந்த டீம் மீண்டும் இணைந்து ‘இம்சை அரசன் 24ம் புலிகேசி’ துவங்கியது. ஆனால், சில நாட்கள் படப்பிடிப்பு நடந்த நிலையில் படப்பிடிப்பில் சிம்பு தேவனுக்கும், வடிவேலுவுக்கும் இடையே கருத்து வேறுபாடு உருவானது. உடை உள்ளிட்ட எல்லா விஷயத்திலும் வடிவேலு தலையிட்டதால் பிரச்சனை எழுந்தது. எனவே, இப்படத்தில் நான் நடிக்க மாட்டேன் எனக்கூறி வடிவேல் அப்படத்திலிருந்து வெளியேறினார்.
பல நாட்களாக படப்பிடிப்பு நடைபெறவில்லை. ஷங்கர் தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தியும் வடிவேல் இறங்கி வரவில்லை. இதன் காரணமாக ஷங்கருக்கு பல கோடி நஷ்டம் ஏற்பட்டது. எனவே, தயாரிப்பாளர் சங்கத்தில் ஷங்கர் வடிவேல் மீது புகார் அளித்தார். எனவே வடிவேலுவுக்கு ‘ரெட் கார்டு’ விதிக்கப்பட்டது. எனவே, பல தயாரிப்பாளர்கள் வடிவேலுவை நடிக்க ஒப்பந்தம் செய்யவில்லை. மெர்சல் உள்ளிட்ட சில படங்களில் மட்டுமே தலை காட்டினார். பல வருடங்களாகவே படப்பிடிப்புக்கு செல்லாமல் வடிவேல் வீட்டில் சும்மாவே இருக்கிறார்.
இப்படியே போனால் நம் சினிமா வாழ்க்கை முடிந்துவிடும் என்பதை தற்போது புரிந்து கொண்ட வடிவேல், இம்சை அரசன் 24ம் புலிகேசி படத்தால் ஷங்கருக்கு ஏற்பட்ட ரூ.6 கோடி நஷ்டத்தை திருப்பி கொடுக்க ஒத்துக்கொண்டதாகவும். முதல் தவணையாக ரூ.4 கோடியும், அடுத்தடுத்து மீது பணத்தை கொடுத்துவிடுவதாக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார் எனவும் செய்திகள் வெளியாகியுள்ளது.
இதைத்தொடர்ந்து வடிவேல் மீதுள்ள ரெட் கார்டு நீக்கப்பட்டு, அவர் திரைப்படங்களில் நடிக்க விதிக்கப்பட்ட தடை விலகி அவர் மீண்டும் நடிக்க துவங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
மீண்டு(ம்) வாங்க வடிவேல்!…
விக்ரம் பிரபு…
தமிழ், தெலுங்கு,…
தமிழ் சினிமாவில்…
கார்த்தி நடிப்பில்…