இப்படி ஆகிப்போச்சே!.. குடும்பத்தில் வந்த சிக்கல்…அப்செட்டில் வடிவேலு….

இம்சை அரசன்  24ம் புலிகேசி திரைப்படத்துன் படபிடிப்பில் ஏற்பட்ட பஞ்சாயத்து காரணமாக ரெட் கார்டு விதிக்கப்பட்டு கடந்த 4 வருடங்களாக வடிவேலு எந்த திரைப்படத்திலும் நடிக்கவில்லை. இனிமேல் அவர் நடிப்பாரா மாட்டாரா என்கிற சந்தேகமே ரசிகர்களுக்கு ஏற்பட்டது. 4 வருடங்கள் கழித்து தற்போதுதான் அந்த பிரச்சனை முடிவுக்கு வந்துள்ளது. அடுத்து லைக்கா தயாரிப்பில் 2 படங்களில் வடிவேலு நடிக்கவுள்ளார். சிராஜ் இயக்கத்தில் ‘நாய் சேகர்’ என்கிற படத்தில் அவர் நடிக்கவுள்ளார்.

vadivelu

திரைத்துறையில் கடந்த 10 வருடங்களாகவே வடிவேலுவுக்கு சறுக்கல்தான். எனவே, ஒரு சாமியாரை அவர் தொடர்ந்து பார்த்து ஆசி பெற்று வருகிறார். கடந்த பல வருடங்களாக வடிவேலுவிடம் எதுவும் பேசாத அந்த சாமியார் ‘இனிமேல் உனக்கு எந்த பிரச்சனையும் இல்லை’ என கூறியதில் உற்சாகத்தில் இருக்கிறார் வடிவேலு.

vadivelu

இந்நிலையில், ஒரு பெண், ஒரு ஆண் என சமீபத்தில் அவருக்கு இரட்டை பேரக்குழந்தைகள் (Twins) பிறந்தது.  இதில், இரண்டும் ஆணாகவே, அல்லது பெண்ணாகவோ பிறந்தால் மட்டுமே அதிர்ஷ்டம். இல்லையேல் அது அதிர்ஷ்டம் இல்லை என சிலர் கொளுத்திப்போட அப்செட் ஆகியுள்ளாராம் வடிவேலு…

Published by
adminram