விட்ட ரூட்டை பிடிக்க.. கார்த்தியுடன் கைகோர்க்கும் வடிவேலு! இன்னொரு பக்கம் சந்தானமா?
நடிகர் வடிவேலு: தமிழ் சினிமாவில் நாகேஷுக்கு பிறகு காமெடியில் தனக்கென ஒரு தனி முத்திரையை பதித்தவர் நடிகர் வடிவேலு. வைகை புயல் என அனைவராலும் அன்போடு அழைக்கப்பட்டவர். விஜய் அஜித் ரஜினி கமல் என அனைத்து முன்னணி நடிகர்களுடனும் நடித்து காமெடியில் ஒரு கலக்கு கலக்கினார். ஆரம்பத்தில் கவுண்டமணி செந்தில் இல்லாத படங்களே கிடையாது. அதைப்போல ஒரு காலகட்டத்தில் வடிவேலு இல்லாத படங்களை நாம் பார்க்கவே முடியாது .
சினிமாவிற்கு பிரேக்: அந்த வகையில் ஹீரோவுக்கு நிகராக வடிவேலுவையும் மக்கள் ரசித்து வந்தனர் .அதற்கு ஏற்ப அவருடைய காமெடி நல்ல ஒரு வரவேற்பை பெற்று வந்தது .தன்னுடைய முக பாவனையாலும் தோற்றத்தாலும் ரசிகர்களை சிரிக்க வைத்தவர் வடிவேலு. ஆனால் ஒரு கட்டத்திற்கு பிறகு படங்களில் வடிவேலுவை பார்க்கவே முடியவில்லை. சில பல பிரச்சனைகளால் இரண்டு வருடங்கள் சினிமாவில் நடிக்க முடியாமல் போனது. அதன் பிறகு கொரோனா என கிட்டத்தட்ட ஐந்து வருடங்கள் வடிவேலுவை ரசிகர்கள் மிஸ் பண்ணார்கள்.
ஆகச்சிறந்த நடிகர்: அதன் பிறகு தான் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் என்ற படத்தில் சோலோவாக காமெடியில் நடித்தார் வடிவேலு. ஆனால் அந்த படம் எதிர்பார்த்த அளவு வரவேற்பை பெறவில்லை. அதனைத் தொடர்ந்து குணசித்திர கேரக்டரில் மாமன்னன் திரைப்படத்தில் நடித்து ஒரு ஆகச் சிறந்த நடிகனாக மக்கள் முன் ஜொலித்தார் வடிவேலு. இப்போது மீண்டும் பகத் பாஸில் உடன் ஒரு படத்தில் நடித்து வருகிறார்.
கார்த்தி29: இந்த நிலையில் மற்றுமொரு புதிய பட அறிவிப்பு வெளியாகி உள்ளது .டாணாக்காரன் திரைப்படத்தின் இயக்குனர் தமிழ் இயக்கத்தில் கார்த்தி அவருடைய 29ஆவது திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். அந்த படத்தில் வடிவேலு ஒரு முக்கியமான கேரக்டரில் நடிக்க இருப்பதாக புதிய தகவல் வெளியாகி உள்ளது. இந்த படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது .
இப்படம் கடல் பின்னணியில் நடக்கும் ஒரு கேங்ஸ்டர் கதையில் உருவாக உள்ளதாக தெரிகிறது. இதில் வடிவேலு காமெடியாக நடிக்கிறாரா அல்லது குணசேத்திர கேரக்டரில் நடிக்கிறாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இன்னொரு பக்கம் நடித்தால் ஹீரோவாகத்தான் நடிப்பேன் என 20 படங்களுக்கு மேல் நடித்தும் ஹீரோ அந்தஸ்தை பெற முடியாமல் மீண்டும் காமெடிக்கு திரும்பியிருக்கிறார் சந்தானம் .ஒரு வேளை வடிவேலுவின் காமெடி கார்த்தி படத்தில் வொர்க் அவுட் ஆனால் வடிவேலுவுக்கும் சந்தானத்திற்கும் இடையே கடும் போட்டி உருவாக வாய்ப்பு இருப்பதாகவும் தெரிகிறது.