ரத்தம் தெறிக்க தெறிக்க.. இளம் தலைமுறையினருக்கு சீர்கேடு... தனுஷை வெளுத்து வாங்கிய பிரபலம்..
தமிழ் சினிமாவில் மிகப் பிரபல நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். ஆரம்ப காலத்தில் இருந்து பல அவமானங்களை சந்தித்து வந்த இவர் படிப்படியாக முன்னேறி தற்போது மிகப் பிரபல நடிகராக உயர்ந்திருக்கின்றார். தமிழ் சினிமா மட்டும் இல்லாமல் பாலிவுட், ஹாலிவுட் என அனைத்திலும் கலக்கி வருகின்றார். தற்போது நடிகரை தாண்டி இயக்குனர் அவதாரம் எடுத்திருக்கும் இவர் தன்னுடைய 50வது திரைப்படத்தை தானே இயக்கி நடித்து இருக்கின்றார்.
ராயன் என்று பெயரிடப்பட்டிருக்கும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து இருக்கின்றது. இந்த திரைப்படத்தில் நடிகர் தனுஷ் உடன் இணைந்து சந்திப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், எஸ் ஜே சூர்யா, செல்வராகவன் உள்ளிட்ட மிகப் பெரிய பட்டாளம் இப்படத்தில் நடித்திருக்கின்றது. இந்த திரைப்படம் வருகிற ஜூலை 26 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கின்றது.
இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. நேற்று கூட படம் நன்றாக வரவேண்டும் என்பதற்காக நடிகர் தனுஷ் குலதெய்வம் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்து வந்தார். இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்த படம் 3 அண்ணன் தம்பிகளுக்கு இடையே ஆன கதையை கூறுகின்றது.
டிரைலரில் கத்தி ரத்தம் என அனைத்தும் இருந்ததை பார்த்த ரசிகர்கள் பலரும் ஒரு ஆக்ஷன் திரைப்படமாக இது இருக்கும் என்று கூறி வருகிறார்கள். இந்நிலையில் இந்த திரைப்படம் குறித்து வலைப்பேச்சு பிஸ்மி ஒரு பேட்டியில் பேசியிருக்கின்றார். அதில் நடிகர் தனுஷின் சமீபத்திய படங்கள் அனைத்திலும் கத்தி, ரத்தம் என அனைத்தும் அதிகமாக இருக்கின்றது.
இது தற்போது இருக்கும் இளைஞர்களுக்கு மிகப்பெரிய சீரழிவு. இப்போது இருக்கும் இளைஞர்கள் திரைப்படங்களில் இருக்கும் நடிகர்களை பார்த்து தான் பல விஷயங்களை கற்றுக் கொள்கிறார்கள். அதிலும் நடிகர் தனுஷ் திரைப்படத்தில் 'அவனைப் போடு, இவன போடு, செஞ்சிடுவேன்' என்ற வார்த்தையெல்லாம் பார்த்து பார்த்து இன்றைய தலைமுறை இளைஞர்கள் இந்த வார்த்தையை தான் அதிக அளவில் பயன்படுத்துகிறார்கள்.
ஒருவரை கொலை செய்வது என்பது பலருக்கும் சாதாரணமான விஷயம் ஆகிவிட்டது. வடசென்னை, அசுரன், கேப்டன் மில்லர் இந்த திரைப்படங்கள் அனைத்துமே ஆக்சன் படங்களாக மட்டுமே வெளியாகி இருந்தன. இந்த படங்கள் அனைத்தும் நல்ல வரவேற்பை கொடுத்த காரணத்தினால் இதை ஒரு ஃபார்முலாவாக பயன்படுத்திக் கொள்ளும் தனுஷ் அதையே தன்னுடைய அடுத்தடுத்த படங்களுக்கும் பயன்படுத்தி எப்படியாவது வெற்றி கொடுத்து விட வேண்டும் என்று எண்ணுகிறார். ஆனால் இந்த படங்கள் இன்றைய தலைமுறையினர்களுக்கு மிகப்பெரிய ஆபத்தை ஏற்படுத்தும் என்பதை உணர தவறுகிறார்கள்" என்று விமர்சித்து பேசியிருந்தார்.