மகிழ் திருமேனி எங்களை திட்டியதற்கு இதுதான் பதில்!. வலைப்பேச்சு அந்தணன் பகிர்ந்த வீடியோ...

Magizh thirumeni: லைக்கா தயாரிப்பில் அஜித் நடித்துள்ள விடாமுயற்சி படத்தை மகிழ் திருமேனி இயக்கியுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த வருடம் ஜனவரி மாதம் துவங்கியது. ஆனால், முடிவதற்கு ஒரு வருடம் ஆகிவிட்டது. லைக்கா நிறுவனம் நிதிநெருக்கடியில் சிக்கியதுதான் முக்கிய காரணம் என சொல்லப்பட்டது.
ஏனெனில், இந்தியன் 2, லால் சலாம், வேட்டையன் போன்ற படங்களால் லைக்கா நிறுவனத்திற்கு நஷ்டம் ஏற்பட்டதால் அந்நிறுவனம் பல கோடி கடனாளி ஆனதாக சொல்லப்பட்டது. இதனால் படப்பிடிப்பு தொடர்ந்து நடக்காமல் நிறைய இடைவெளி விழுந்தது. இதனால் அஜித் குட் பேட் அக்லிக்கும், திரிஷா வேறு சில படங்களுக்கும் நடிக்கப்போனார்கள்.
விடாமுயற்சி: இறுதியாக குட் பேட் அக்லி படம் முடிந்த பின்னரே விடாமுயற்சி படம் முடிவடைந்தது. இந்த பொங்கலுக்கு ரிலீஸ் என அறிவித்து அதன்பின் லைக்கா நிறுவனம் பின் வாங்கியது. ஒருபக்கம், மகிழ் திருமேனி வேகமாக படமெடுக்கும் இயக்குனர் இல்லை. மிகவும் மெதுவாகவே காட்சிகளை எடுப்பார் என வலைப்பேச்சு யுடியூப் சேனலில் சொல்லப்பட்டது.
வலைப்பேச்சு: இந்நிலையில், சமீபத்தில் ஊடகம் ஒன்றில் பேசிய மகிழ் திருமேனி ‘படப்பிடிப்பு முடிந்தபின்னரும் நான் பேட்ஜ் வொர்க் செய்ய மீண்டும் அசர்பைசான் போனேன் என சொல்கிறார்கள். நான் எனது முதல் படத்திலேயே பேஜ் வொர்க் செய்தது இல்லை. மேலும், எடுத்த காட்சியை திருப்தியில்லாமல் மீண்டும் மீண்டும் எடுக்கிறேன் என சொன்னார்கள். அதிலும் உண்மையில்லை. இப்படி தேவையில்லாத கட்டுக்கதைகளை சொல்லி வருகிறார்கள். இது எல்லாமே பொய்’ என சொன்னார்.
மகிழ் திருமேனி பேசிய அந்த வீடியோவை சிலர் டிவிட்டரில் பகிர்ந்து வலைப்பேச்சு சேனலை நக்கலடித்து கமெண்ட் போட்டனர். இந்நிலையில், கலகத் தலைவன் பட விழாவில் உதயநிதி பேசியிருந்த வீடியோவை பகிர்ந்து, மகிழ் திருமேனி எங்களை திட்டியதற்கு இதுதான் பதில் என பதிவிட்டிருந்தார்.
உதயநிதி ஸ்டாலின்: அந்த வீடியோவில் பேசியிருக்கும் உதயநிதி ‘மகிழ் திருமேனி படத்தை மிகவும் ஸ்லோவாகத்தான் எடுப்பார். ஒரு காட்சியை ஒரு நாள் முழுக்க எடுப்பார். அடுத்தநாள் வேறு காட்சியை எடுப்பார் என நினைத்து வந்தால் மீண்டும் அதே காட்சியை எடுப்பார். இந்த படத்தை 3 வருடங்கள் எடுத்தார்’ என பேசியிருந்தார். இதைத்தான் வலைபேச்சு டீம் பதிலடியாக கொடுத்திருக்கிறது.
அதேநேரம், அதே மேடையில் பேசிய மகிழ் திருமேனி ‘இடையில் 2 கோவிட் லாக்டவுன் வந்தது. உதயநிதி 6 மாதங்கள் பிரச்சாரத்திற்கு போனார். கதாநாயகி தேடவே மூன்று மாதம் ஆகியது. எந்த கதாநாயகியை காட்டினாலும் வேண்டாம் வேண்டாம் என சொன்னார். கடைசியில் நித்தி அகர்வாலை விட்டால் வேறு வழியே இல்லை என சொன்னபின்னரே ஒத்துக்கொண்டார். எனக்கு சில பிரச்சனைகள் வந்தபோதும் நான் பிரேக் எடுக்கவில்லை’ என பேசியிருந்தார்.