காதலர் தினம்… சிங்கிள்ஸ்களுக்காக சார்க்கோல் தோசை – சென்னை ஓட்டலின் நூதன ஐடியா !

Published on: February 13, 2020
---Advertisement---

c6ba593da71268094463f3739aa65041

சென்னை அடையார் ஆனந்த பவன் ஹோட்டலில் காதலர் தினத்தை முன்னிட்டு காதலிக்காத மற்றும் திருமணம் ஆகாத இளைஞர்களுக்காக சார்க்கோல் தோசை எனப்படும் புதிய தோசை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

காதலர் தினம் வருவதை முன்னிட்டு காதலர்கள் தங்கள் காதல் கொண்டாட்டங்களை ஆரம்பித்துள்ளனர். இந்நிலையில் தங்களை சிங்கிள்ஸ் மற்றும் முரட்டு சிங்கிள்ஸ் என அடையாளப்படுத்திக் கொள்பவர்களுக்காக காதலர் தின எதிர்ப்பைத் தெரிவிக்கும் பொருட்டு சென்னையின் பிரபல ஹோட்டல் தோசை ஒன்றை உருவாக்கியுள்ளது.

சார்க்கோல் என அழைக்கப்படும் இந்த தோசையில் கரித்தூள்களைக் கலந்து கருப்பு வண்ணத்தில் தோசையை சுட்டு விற்பனை செய்து வருகின்றனர். இந்த தோசைகள் நல்ல விற்பனை ஆவதாகவும் சொல்லப்படுகிறது. ஆனால் இந்த தோசையை சாப்பிட்டால் உடல்நலத்துக்குக் கேடு வருமா என்பது குறித்து கேள்விகள் எழுந்துள்ளன.

Leave a Comment