இந்திய சினிமாவில் முதன் முறை!… யுடியூப்பில் ஹிட் அடித்த ‘வலிமை’ மோஷன் போஸ்டர்…

Published on: July 12, 2021
---Advertisement---

7df6520dd4a5892359b001e2383543ee

பாலிவுட் தயாரிப்பாளர் போனிகபூர் தயாரிப்பில் நடிகர் அஜித் நடித்துவரும் திரைப்படம் வலிமை. இப்படத்தை ‘நேர்கொண்ட பார்வை’ படத்துக்கு பின் வினோத் இயக்கி வருகிறார். 

இப்படத்தின் பூஜை 18.10.2019 அன்று போடப்பட்டது. ஆனால், படத்தில் நடிக்கும் நடிகர்கள், ஏன் அஜித்திற்கு ஜோடியாக நடிக்கும் நடிகை யார் என்கிற தகவல் கூட வெளியாகவில்லை. படம் துவங்கி ஒன்றரை வருடங்கள் ஆகிவிட்ட நிலையில் வலிமை படத்தின் அப்டேட்டை கேட்டு அஜித் நச்சரித்து வந்தனர். 

e9aa410494779a54a8d31c83cd395c43

இந்நிலையில்தான், இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் நேற்று வெளியாகி அஜித் ரசிகர்களை உற்சாகப்படுத்தியது. 4 போஸ்டர்களும், ஒரு மோஷன் போஸ்டர் வீடியோவையும் படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த மோஷன் போஸ்டர் வெளியாகி ஒரு நாள் ஆகிவிட்ட நிலையில் இந்த வீடியோ யுடியூப்பில் டிரெண்டிங்கில் முதலிடத்தில் உள்ளது. மேலும், 83 லட்சம் பேருக்கும் மேல் இந்த வீடியோவை பார்த்துள்ளனர். மேலும், 10 லட்சம் பேர் இந்த வீடியோவுக்கு லைக் செய்துள்ளனர்.  இதுவரை இந்திய சினிமாவில் எந்த மோஷன் போஸ்டர் வீடியோவுக்கும் இவ்வளவு லைக் கிடைத்திருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment