ரஜினியுடன் மீண்டும் மோதும் அஜித்! அண்ணாத்த - வலிமை ஒரே நாளில் ரிலீஸ்?...

by adminram |

d65a15cc83106f499aacaddfb6219db0

சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினி, மீனா, குஷ்பு, நயன்தாரா, கீர்த்திசுரேஷ் உள்ளிட்ட பலரும் நடித்து வரும் திரைப்படம் ‘அண்ணாத்த’. இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. ரஜினி நடிக்கும் காட்சிகள் 4 நாட்கள் எடுக்க வேண்டியுள்ளது. கல்கத்தாவில் அதை எடுக்க திட்டமிட்டிருந்தனர். ஆனால், திடீரென அது தள்ளிப்போனது. எப்படியும் விரைவில் அண்ணாத்த திரைப்படத்தின் படப்பிடிப்பு முடியவுள்ளது. இப்படம் தீபாவளியை குறி வைத்துள்ளது. நவம்பர் 4ம் தேதி வெளியாவதாக படக்குழு ஏற்கனவே அறிவித்துவிட்டது.

74de250962b21808ae94bd4672d76d8c

ஒருபக்கம் வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் திரைப்படம் வலிமை. இப்படம் துவங்கி ஒன்றரை வருடங்கள் ஆகிறது. ஆனால், கொரோனா பரவலால் படப்பிடிப்பு தடைபட்டு தற்போது இறுதிகட்டத்திற்கு வந்துள்ளது. சில காட்சிகளை வெளிநாட்டில் எடுக்க படக்குழு திட்டமிட்டிருந்தது. ஆனால், இப்போது அது சாத்தியமா என்பது தெரியவில்லை. எனவே, இந்தியாவிலேயே எடுக்க திட்டமிட்டுள்ளனர்.

f5287a532174338e9de5853d4690e75b-2

இந்நிலையில், வலிமை திரைப்படத்தையும் தீபாவளிக்கு வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே கடந்த வருடம் பொங்கலின் போது ரஜினி நடித்த பேட்ட மற்றும் அஜித் நடித்த விஸ்வாசம் என 2 திரைப்படங்களும் மோதியது. இதில், பேட்டையை விட விஸ்வாசம் அதிக வசூ ஈட்டியது. தற்போது விஸ்வாசம் பட இயக்குனர் இயக்கிய ‘அண்ணாத்த’ படத்துடன் அஜித்தின் ‘வலிமை’ மோதவுள்ளது.

எப்படியும் 2 பெரிய நடிகர்களின் திரைப்படங்கள் ரசிகர்களுக்கு பொங்கல் விருந்தாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.

Next Story