More

தீபாவளிக்கு ரஜினியுடன் மோதும் அஜித்?…. இந்த தடவ எந்த படம் அதிக வசூல் செய்யும்?…

போனி கபூர் தயாரிப்பில் நடிகர் அஜித் நடித்துவரும் திரைப்படம் வலிமை. இப்படத்தை ‘நேர்கொண்ட பார்வை’ படத்துக்கு பின் வினோத் இயக்குகிறார். படத்தில் நடிக்கும் நடிகர்கள், ஏன் அஜித்தின் ஜோடிக்கூட இதுவரை யார் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படவில்லை. 

Advertising
Advertising

அவ்வப்போது படப்பிடிப்பு தளத்தில்  சில புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறது.. இப்படத்தில் அஜித் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படம் துவங்கி 2 வருடங்கள் ஆகிவிட்ட நிலையில் வலிமை படத்தின் அப்டேட்டை கேட்டு நச்சரித்து வருகின்றனர்.

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அஜித்தின் பிறந்தநாளான மே 1ம் தேதி இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கொரோனா பரவல் காரணமாக அது ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக், டீசர், ட்ரெய்லர் என அனைத்தும் எப்போது வெளியாகும் என அஜித் ரசிகர்கள் தவமாய் தவமிருந்து காத்துக்கிடக்கின்றனர். 

வலிமை படத்தின் படப்பிடிப்பு 95 சதவீதம் முடிந்துவிட்டது. இன்னும் 10 நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு நடத்த வேண்டியுள்ளதாம். அதை வெளிநாட்டில் எடுக்க இயக்குனர் வினோத் திட்டமிட்டிருப்பதால் எது எப்போது எடுக்கப்படும் என தெரியவில்லை.  

அதேபோல், ரஜினி நடித்துள்ள அண்ணாத்த திரைப்படத்தின் படப்பிடிப்பும் ஏறக்குறைய முடிந்துவிட்டது. ரஜினி நடிக்கும் காட்சிகளை சிவா எடுத்து முடித்துவிட்டார். இன்னும் சில நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு பாக்கி உள்ளது. கொரோனா ஊரடங்கு முடிந்து இயல்பு நிலைக்கு திரும்பிய பின்னரே வலிமை, அண்ணாத்த படங்களின் படப்பிடிப்பு முடிவுக்கு வரும் எனத்தெரிகிறது.

இந்நிலையில், வலிமை படத்தை தீபாவளிக்கு வெளியிடலாம் என போனிகபூர் கருதுகிறாராம். ஏற்கனவே, அண்ணாத்த படம் தீபாவளி ரிலீஸ் என அறிவிக்கப்பட்டு விட்டது. எனவே, ரஜினியுடன் அஜித் மோதுவாரா என்பது தெரியவில்லை. ஏற்கனவே, விஸ்வாசமும், பேட்டையும் தீபாவளிக்கு மோதியது. அதில், விஸ்வாசம் திரைப்படமே அதிக வசூலை பெற்றது குறிப்பிடத்தக்கது.

Published by
adminram

Recent Posts