ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் திரைப்படம் ‘வலிமை’. இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடையும் நிலையில் உள்ளது. இப்படம் துவங்கி ஒன்றரை வருடங்கள் ஆகிவிட்ட நிலையில் இப்படத்தின் வேலைகள் முடிந்து எப்போது வெளியாகும் என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது.
இப்படம், அண்ணாத்த படத்திற்கு போட்டியாக தீபாவளிக்கு வெளியாக முதலில் திட்டமிடப்பட்டது. ஆனால், தேவையில்லாத சர்ச்சைகளை தவிர்க்க அப்படத்திற்கு முன்பே இப்படத்தை வெளியிட படக்குழு முடிவெடுத்தது. விஜயதசமியை முன்னிட்டு அக்டோபர் 14ம் தேதி வலிமை படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.
இந்நிலையில், இப்படத்தில் இடம் பெற்ற ‘வேறமாதிரி’ என்கிற பாடல் இன்று இரவு 9 மணிக்கு வெளியாகவுள்ளது. இப்படத்திற்கு யுவன் சங்கர ராஜா இசையமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
எனவே, அஜித் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
ஜன நாயகனை…
கடந்த 15…
பொங்கல் ரிலீஸாக…
நடிகர் ரஜினிகாந்த்…
சிவகார்த்திகேயன், ஜெயம்…