போட்றா வெடிய!… வலிமை ஃபர்ட்ஸ்ட் லுக் வெளியாகும் தேதி இதுதானாம்….உற்சாகத்தில் தல ரசிகர்கள்….

Published on: June 28, 2021
---Advertisement---

703eda0a9c5f03bf34fba6496ca1b7d3

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் தயாரிப்பில் நடிகர் அஜித் நடித்துவரும் திரைப்படம் வலிமை. இப்படத்தை ‘நேர்கொண்ட பார்வை’ படத்துக்கு பின் வினோத் இயக்கி வருகிறார். படத்தில் நடிக்கும் நடிகர்கள், ஏன் அஜித்தின் ஜோடிக்கூட இதுவரை யார் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படவில்லை. 

b7dad72cc73e5aca654ce95e824bc714-3

அவ்வப்போது படப்பிடிப்பு தளத்தில் சில புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறது.. இப்படத்தில் அஜித் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடிப்பது மட்டும்தான் இப்போதைக்கு ரசிகர்களுக்கு ஆறுதல். வேறு எந்த அப்டேட்டும் இதுவரை வெளியாகவில்லை. எனவே, படம் துவங்கி 2 வருடங்கள் ஆகிவிட்ட நிலையில் வலிமை படத்தின் அப்டேட்டை கேட்டு நச்சரித்து வருகின்றனர். ஒரு கட்டத்தில் விரைவில் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடுவோம் என வலிமை பட தயாரிப்பாளர் போனிகபூர் தெரிவித்தும் இதுவரை சத்தமே இல்லாமல் அமைதி இருக்கிறது படக்குழு.       

8aa62e2f32aea746a2975d35529c6bda

இப்படத்தின் படப்பிடிப்பு 80 சதவீதம் முடிந்துவிட்டதாக தெரிகிறது. பைக்கை மிகவும் வேகமாக ஓட்டும் பைக் ரேசர்களை வைத்து திருட்டு உள்ளிட்ட பல குற்றங்களை இப்படத்தின் வில்லன் கார்த்திகேயா செய்து வருகிறார். அதை போலீஸ் உயர் அதிகாரியான அஜித் எப்படி கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்கிறார் என்பதுதான் கதை என்பது தெரியவந்துள்ளது.

ec6df3c5d6258c5658810f74c88190ab

இந்நிலையில், வலிமை படத்தின் ஃபர்ஸ்ட்லுக் வெளியிடுவது பற்றி படக்குழு ஒரு முடிவுக்கு வந்துள்ளதாம். அதன்படி ஜூலை 3 வாரத்தில் வெளியிடலாம் என யோசித்து வருகிறதாம். அநேகமாக ஜூலை 15ம் தேதி அஜித்தின் செண்டிமெண்டான  வியாழக்கிழமை வருவதால் அன்று வெளியாக வாய்ப்பிருப்பதாக கருதப்படுகிறது.

Leave a Comment