வலிமை படத்தில் இதுதான் அஜித்தின் குடும்பம்... லீக் ஆன புகைப்படம்
அஜித்தின் 60வது படமாக உருவாகிறது வலிமை. இதை ஹெச்.வினோத் இயக்குகிறார். போனி கபூர் தயாரித்து வரும் இப்படத்திற்கு யுவன் சங்கர்ராஜா இசையமைக்கிறார். ஈஸ்வரமூர்த்தி ஐபிஎஸ் என்ற காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்தில் தல நடித்து வருகிறார். கொரோனாவால் நிறுத்தப்பட்டு இருந்த படப்பிடிப்பு கடந்த மாதம் சென்னையில் தொடங்கப்பட்டது.
வலிமை படத்தின் பெயரை தவிர படக்குழு இதுவரை எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை. ரசிகர்களும் யார் யாரிடமோ சிபாரிசு கூட சென்று விட்டார்கள். ஆனால் அறிவிப்பு தான் வந்த பாடு இல்லை. எனவே, வலிமை அப்டேட்டுக்காக அவர்கள் தவம் கிடக்கிறார்கள்.
இந்நிலையில், வலிமை படத்தின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது. அதாவது அம்மா வேடத்தில் நடிக்கும் சுமத்ரா அருகில் அஜித் மற்றும் மற்ற நடிகர்கள் அமர்ந்துள்ளனர். இப்படத்தில் அவர்கள் அஜித்தின் குடும்பத்தினராக நடிக்கிறார்கள் என்பது பார்த்தாலே தெரிகிறது.
படத்தின் எந்த அப்டேட்டும் கிடைக்காத நிலையில், இப்புகைப்படத்தை அஜித் ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் பகிர்ந்து வருகின்றனர்.