More

மாஸ் பக்கா மாஸ்…வலிமை படப்பிடிப்பில் தல அஜித் – அதிரும் இணையதளம்

போனி கபூர் தயாரிக்க, வினோத் இயக்க, நடிகர் அஜித் நடித்துள்ள ‘வலிமை’ படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் மாதம் முதல் தொடங்குவதாக ஏற்கனவே செய்திகள் வெளியானது.

Advertising
Advertising

நடிகர் அஜித் நடிப்பில் பாதி படப்பிடிப்பு முடிந்துள்ள வலிமை திரைப்படம், கொரோனா லாக்டவுனால் நிறுத்தப்பட்டது. ஆனால், 100 பேரைக் கொண்டு படப்பிடிப்பை நடத்திக் கொள்ளலாம் என அரசு அறிவித்துள்ளதை அடுத்து படிப்படியாக படப்பிடிப்பிற்கான வேலைகள் துவங்கியது.

இதைத்தொடர்ந்து ஹைதராபாத் ராமாஜிராவ் பிலிம் சிட்டியில் தற்போது படப்பிடிப்பு துவங்கியுள்ளது. சில நாட்கள் அஜித் இல்லாத காட்சிகள் எடுக்கப்பட்டது. தற்போது அஜித் மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொண்டு படப்பிடிப்புகள் வேகமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று அஜித் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. பல மாதங்களாக வலிமை பற்றி எந்த அப்டேட்டும் இல்லாத நிலையில், இந்த புகைப்படம் அஜித் ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், விரைவில் வலிமை பற்றிய முக்கிய அறிவிப்பு வெளியாகும் என கூறப்பட்டு வருகிறது.

Published by
adminram

Recent Posts