சில மணி நேரங்களில் 3 மில்லியன் வியூஸ்.. யுடியூப்பில் ஹிட் அடித்த வலிமை பாடல்….

அஜித் நடித்துள்ள வலிமை படத்தில் இடம் பெற்ற ‘நாங்க வேற மாதிரி’ பாடல் வரிகள் வீடியோ நேற்று இரவு சரியாக 10.48 மணிக்கு வெளியானது. இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த பாடலை இயக்குனர் விக்னேஷ் சிவன் எழுதியுள்ளார். இந்த பாடலை யுவன் சங்கர் ராஜாவும், அனுராக் குல்கர்னி என்பவரும் இணைந்து பாடியுள்ளனர். ஒரு கோவில் திருவிழாவில் பாடுவது போல் இந்த பாடல் காட்சி படமாக்கப்பட்டுள்ளது. 

இந்த பாடல் வீடியோ யுடியூப்பில் வெளியாகி 8 மணி நேரங்களில் 3 மில்லியனுக்கும் அதிகமானோர் பார்த்து ரசித்துள்ளனர். காலை 8 மணியளவில் 34,73,800 பேர் இந்த பாடலை பார்த்துள்ளனர். இந்த தகவலை அஜித் ரசிகர்கள் #ValimaiFirstSingle என்கிற ஹேஷ்டேக் மூலம் டிவிட்டரில் டிரெண்டிங் செய்து வருகின்றனர்.

Published by
adminram