
தமிழ் சினிமாவில் சமூகவலைத்தளங்களில் அதிக பில்டப் கொடுக்கப்பட்ட படம் என்றால் அது அஜித் நடித்து வரும் வலிமை படம்தான். இப்படத்தின் அப்டேட்டை கேட்டு கேட்டே அஜித் ரசிகர்கள் ஓய்ந்து போனார்கள். ஹெச்.வினொத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடிவடையவுள்ளது. ரஷ்யாவில் சில நாட்கள் படப்பிடிப்பு நடக்கவுள்ளது.
இப்படத்தை தீபாவளிக்கு முன்பே, அதாவது, விநாயகர் சதுர்த்தியான அக்டோபர் 14ம் தேதி வெளியிட படக்குழு முடிவெடுத்திருந்தது. இந்த தகவல் நேற்று அப்படத்தின் முதல் பாடல் வீடியோ வெளியான போதே படக்குழு அறிவிக்க திட்டமிட்டிருந்தது. ஆனால், கடைசியில் ரிலீஸ் தேதி நேற்று அறிவிக்கப்படவில்லை.

இந்நிலையில், வலிமை படத்தின் ரிலீஸ் தள்ளி போயிருப்பதாக செய்திகள் கசிந்துள்ளது. தள்ளிபோவதென்றால் சில நாட்கள் அல்ல. ஏறக்குறைய 3 மாதம். அதாவது 2022 பொங்கல் விடுமுறைக்கு வலிமை படத்தை வெளியிடலாம் என படக்குழு யோசித்து வருகிறதாம்.
கொரோனா மூன்றாவது அலை எப்போது வேண்டுமானாலும் துவங்கலாம். தியேட்டர்கள் திறக்க வாய்ப்பில்லை என்பதால் இந்த முடிவா இல்லை, இல்லை படப்பிடிப்பை முடித்து மற்ற வேலைகளை முடிக்கவே இன்னும் 3 மாதங்கள் ஆகுமா என்பது தெரியவில்லை.

இதைத்தொடர்ந்து, வலிமை படம் அக்டோபர் மாதம் வெளியாகும் என காத்திருந்த தல அஜித் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அப்டேட்டுதான் லேட்டா வந்துச்சுன்னா இப்ப படமுமா? என சமூகவலைத்தளங்களில் அவர்கள் பொங்கி வருகின்றனர்.