மீண்டும் மீண்டும் தள்ளிப்போகும் வலிமை ரிலீஸ்... அப்டேட் கேட்பதையே விட்டு விட்ட ரசிகர்கள்....
ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் திரைப்படம் வலிமை. இப்படம் ரசிகர்களிடையேயும், திரையுலக வட்டாரத்திலும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த வருடம் துவக்கத்தில் துவங்கிய இப்படம் தற்போதுதான் முடிவுக்கு வந்துள்ளது. சென்னை, ஹைதராபாத் என படப்பிடிப்பு நடந்து வந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு படக்குழு ரஷ்யா சென்றது. அங்கு பரபர ஆக்ஷன் காட்சிகள் படம்பிடிக்கப்பட்டது. இதோடு, வலிமை படத்தின் படப்பிடிப்பு முடிந்ததாக கூறப்படுகிறது.
படப்பிடிப்பு படக்குழு சென்னை திரும்பிவிட்டாலும் முடிந்தாலும் அஜித் ரஷ்யாவில் தங்கி பைக் ரேஸ் பயணம் மேற்கொண்டார். இது தொடர்பாக பல புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியது. இந்த புகைப்படங்களை அஜித் ரசிகர்கள் சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில், இப்படம் எப்போதும் வெளியாகும் என்பதில் மாறி மாறி தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கிறது. சில மாதங்களுக்கு முன்பு இப்படம் தீபாவளி ரிலீஸ் எனக்கூறப்பட்டது. அதன்பின் வினாயகர் சதுர்த்தி அன்று வெளியாகும் என செய்திகள் வெளியானது. தற்போது இப்படம் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு வெளியாகும் என செய்திகள் வெளியாகியுள்ளது.
ஒருபக்கம், இப்படத்தின் அப்டேட் கேட்பதையே அஜித் ரசிகர்கள் விட்டு விட்டனர். ஏனெனில், எவ்வளவு கேட்டாலும் அப்படத்தின் தயாரிப்பாளர் போனிகபூரிடமிருந்து எந்த பதிலும் வரப்போவதில்லை என நினைத்துவிட்டார்கள் போலும்