ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் திரைப்படம் ‘வலிமை’. இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடையும் நிலையில் உள்ளது. இப்படத்தை பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூர் தயாரித்து வருகிறார். இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்கள் மற்றும் மோஷன் போஸ்டர் வீடியோ சில நாட்களுக்கு முன்பு வெளியாகி அஜித் ரசிகர்களை கவர்ந்ததோடு மட்டுமில்லாமல் யுடியூப்பில் அந்த வீடியோ டிரெண்டிங் ஆனது.
இப்படம் துவங்கி ஒன்றரை வருடங்கள் ஆகிவிட்ட நிலையில் இப்படத்தின் வேலைகள் முடிந்து எப்போது வெளியாகும் என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது. இப்படம், அண்ணாத்த படத்திற்கு போட்டியாக தீபாவளிக்கு வெளியாக முதலில் திட்டமிடப்பட்டது. ஆனால், தேவையில்லாத சர்ச்சைகளை தவிர்க்க அப்படத்திற்கு முன்பே இப்படத்தை வெளியிட படக்குழு முடிவெடுத்தது.
அதன்படி தற்போது அக்டோபர் 14ம் தேதி வலிமை படத்தை வெளியிட அஜித் திட்டமிட்டுள்ளாராம். அதற்கு பல காரணங்களும் இருக்கிறது. ஆயுத பூஜை, விஜயதசமி என தொடர் விடுமுறை வருகிறது. மேலும், அக்டோபர் 14ம் தேதி வியாழக்கிழமை. அஜித் திரைப்படங்கள் எப்போதும் வியாழக்கிழமைதான் வெளியாகும். ஏனெனில் அஜித் ஒரு தீவிர சாய்பாபா ரசிகர். சாய்பாபாவுக்கு வியாழக்கிழமை உகந்த நாள் என்பதால் அந்நாளில் தன் படம் வெளியாவதையே அஜித் விரும்புவார். அதன்படியே அந்த தேதியில் வலிமை வெளியாகவுள்ளது.
இன்னும் ஒரு வாரம் படப்பிடிப்பு பாக்கி உள்ளது. அதை ரஷ்யாவில் எடுக்க படக்குழு திட்டமிட்டுள்ளது. அந்த ஷெட்யூல் முடிந்தால் வலிமை படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக முடிவது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து திரைப்பிரபலங்கள்…
ஜன நாயகனை…
கடந்த 15…
பொங்கல் ரிலீஸாக…
நடிகர் ரஜினிகாந்த்…