வெளியான ‘வலிமை’புகைப்படம்.. தெறிக்கவிடும் தல அஜித்.. கதறும் ரசிகர்கள்...

by adminram |

3864d0f266fa4b61df3279a5c767d7f3

நேர்கொண்ட பார்வை திரைப்படத்திற்கு பின் அஜித் நடித்து வரும் திரைப்படம் வலிமை. இப்படத்தை வினோத் இயக்க, போனிகபூர் தயாரித்து வருகிறார். இப்படம் துவங்கி ஒரு வருடம் ஆகியும் இப்படம் தொடர்பான அப்டேட் எதையும் படக்குழு வெளியிடவில்லை. எனவே, அப்டேட் கேட்டு கேட்டு அஜித் ரசிகர்கள் ஓய்ந்து போய்விட்டனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது. அஜித் வேகமாக பைக் ஓட்டும் காட்சிகள் படம் பிடிக்கப்பட்டு வருகிறது. படப்பிடிப்பில் அஜித் கீழே விழுந்து அவருக்கு காயங்களும் ஏற்பட்டது.

இந்நிலையில், அஜித் பைக்கை வீலிங் செய்து ஓட்டும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி அப்டேட்டை எதிர்பார்த்து காத்திருக்கும் தல ரசிகர்களுக்கு உற்சாகத்தை கொடுத்துள்ளது. இந்த புகைப்படத்தை அஜித் ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் பகிர்ந்து வருகின்றனர்.

Next Story