யூரோ கோப்பை கால்பந்து போட்டியிலும் வலிமை அப்டேட்… இது இல்லையா ஒரு எண்டு!…

Published on: July 8, 2021
---Advertisement---

98bf88d3ac67643b0e1bf1c7f03be34e

பாலிவுட் தயாரிப்பாளர் போனிகபூர் தயாரிப்பில் நடிகர் அஜித் நடித்துவரும் திரைப்படம் வலிமை. இப்படத்தை ‘நேர்கொண்ட பார்வை’ படத்துக்கு பின் வினோத் இயக்கி வருகிறார். இப்படத்தின் பூஜை 18.10.2019 அன்று போடப்பட்டது. ஆனால், படத்தில் நடிக்கும் நடிகர்கள், ஏன் அஜித்திற்கு ஜோடியாக நடிக்கும் நடிகைய் யார் என்கிற தகவல் கூட வெளியாகவில்லை.

c23e2e251493a35344a0358599adc1f3

அவ்வப்போது படப்பிடிப்பு தளத்தில் சில புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறது.. படம் துவங்கி ஒன்றரை வருடங்கள் ஆகிவிட்ட நிலையில் வலிமை படத்தின் அப்டேட்டை கேட்டு அஜித் நச்சரித்து வருகின்றனர். 3 மாதங்களுக்கு முன்பு ‘ விரைவில் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடுவோம்’ என வலிமை பட தயாரிப்பாளர் போனிகபூர் தெரிவித்தும் இதுவரை எந்த அப்டேட்டும் வெளியாகவில்லை.

எனவே, பிரதமர் மோடி, முன்னாள் முதல்வர் பழனிச்சாமி ஆகியோரிடம் கூட தல ரசிகர்கள் வலிமை அப்டேட் கேட்ட சம்பவம் நடந்தது. அதேபோல், கிரிக்கெட் போட்டி நடைபெறும் விளையாட்டு மைதானத்திலும் தல ரசிகர்கள் வலிமை அப்டேட்டை கேட்கும் புகைப்படங்கள் ஏற்கனவே வெளியாகி வைரலாகியது. இதனால், கடுப்பான அஜித் ரசிகர்கள் இப்படி செய்ய வேண்டாம் என ஒரு அறிக்கையும் வெளியிட்டார். ஆனாலும், அஜித் ரசிகர்கள் மாறவில்லை.

7a8f926b62024db179b0adf4bc25c545

இந்நிலையில், யூரோ கோப்பை கால்பந்து தொடர் அரையிறுதிப்போட்டி நடைபெற்ற மைதானத்தில் ரசிகர் ஒருவர் ‘வலிமை அப்டேட்’ கேட்டு கையில் பாதகையை ஏந்தி நின்ற புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது.

Leave a Comment