More

என்ன நான் சொல்றது… தல ரசிகர்களை அலார்ட் செய்த வலிமை வில்லன்!

நடிகர் அஜித் நடிப்பில் பாதி படப்பிடிப்பு முடிந்துள்ள வலிமை திரைப்படம், கொரோனா லாக்டவுனால் நிறுத்தப்பட்டது. இந்நிலையில் இப்போது 75 பேரைக் கொண்டு படப்பிடிப்பை நடத்திக் கொள்ளலாம் என அரசு அறிவித்துள்ளதை அடுத்து படிப்படியாக படப்பிடிப்புகள் தொடங்கியுள்ளன.

Advertising
Advertising

இருந்தாலும் படத்தின் அப்டேட் ஏதாச்சும் கொடுங்கள் என அஜித் ரசிகர்கள் தொடர்ந்து கேட்டு வருகின்றனர். அந்தவகையில் சமீபத்தில் பிறந்தநாள் கொண்டாடிய வலிமை பட வில்லன் கார்த்திகேயாவிற்கு வாழ்த்து கூறிய அஜித் ரசிகர்கள் அவரிடம் அப்டேட் கேட்டு நச்சரித்தனர்.

அதற்கு பதில் அளித்த கார்த்திகேயா, ” அன்பை பொழிந்த தல அஜித் ரசிகர்களுக்கு என் நன்றி. உங்களை திருப்தி படுத்துவதற்காக  தான் நான் உழைத்துக்கொண்டிருக்கிறேன். கொஞ்சம் பொறுமையாக இருங்கள். நீங்க எதிர் பார்த்ததை விட சிறப்பான ஒரு அப்டேட் வரும். வலிமை தல தரிசனத்திற்கு காத்திருக்கிறேன். என்ன நான் சொல்றது…  என்று பதிவிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளார்.

Published by
adminram

Recent Posts