விசிலில் வந்தே மாதரம் பாடி அசத்தும் விந்தை மனிதர்

by adminram |

63747f3fb76fee342b2ce5ebb048adde

திறமைகளில் எவ்வளவோ வகைகள் உண்டு பலரும் தங்கள் திறமைகளை பலவிதத்தில் வெளிப்படுத்தி வருகின்றனர். விதவிதமான திறமைகளையும் வைத்துள்ளனர். எல்லா திறமையாளர்களுக்கும் திறமைக்கேற்ற வாய்ப்புகள் கிடைக்குமா என்றால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

இருப்பினும் தற்போது இருக்கும் யூ டியூப், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட தகவல் தொடர்புகள் மூலம் தங்கள் திறமையை சிலர் வெளிக்கொணர்ந்து வருகின்றனர்.

சென்னையை சேர்ந்தவர் ராஜேஸ். கட்டிட பொறியாளரான இவர் சினிமா பாடல்கள் மீது தீவிர ஆர்வமுடையவர். விளையாட்டாக சினிமா பாடல்களை விசில்களில் பாடி அனைத்து சினிமா பாடல்களையும் விசிலிலேயே தெள்ளத்தெளிவாக பாடும் அளவு தேர்ச்சி அடைந்து விட்டார்.

சமீபத்தில் நடந்து முடிந்த 2021 இந்திய சுதந்திர தினத்துக்காக வந்தே மாதரம் பாடலை விசிலிலேயே முழுவதும் பாடி தனது சேனலில் வெளியிட்டுள்ளார்.

இதை டோக்கியோ ஒலிம்பிக்கில் வென்ற வீரர்களுக்கு சமர்ப்பிப்பதாகவும் கூறியுள்ளார்.

Next Story