அவமானம்.. அசிங்கம்…நிகழ்ச்சியில் இருந்து வெளியேறுகிறேன்… வனிதா விஜயகுமார் பரபரப்பு புகார்

ஏற்கனவே 2 முறை விவாகரத்து பெற்ற வனிதா விஜயகுமார் 3வதாக பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்தார். ஆனால், அந்த திருமணமும் அவருக்கு நீண்டநாள் நிலைக்கவில்லை. சில காரணங்களால் அவரை பிரிந்தார். அதோடு, விஜய் டிவியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மேலும் பிரபலமானார். தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சில நிகழ்ச்சிகளில் நடுவராக பணிபுரிந்து வருகிறார். 

சில திரைப்படங்களில் நடிக்கவும் அவருக்கு வாய்ப்புகள் வருகிறது. மேலும், தன்னுடையை யுடியூப் சேனலில் விதவிதமான சமையல்களை செய்து வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அதோடு, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது எடுக்கப்படும் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.

இந்நிலையில், விஜய் தொலைக்காட்சியில் பணிபுரியும் ஒருவர் மீது அவர் பரபரப்பான புகார்களை கூறியுள்ளார். ஒருவர் கொடுக்கும் தொல்லையால் ‘பிக்பாஸ் ஜோடிகள்’ நிகழ்ச்சியிலிருந்து வெளியேறுகிறேன் என அவர் குறிப்பிட்டுள்ளார். விஜய் டிவிக்கும் எனக்கும் நல்ல உறவு உண்டு. பிக்பாஸ், கலக்கப்போவது யாரு, குக் வித் கோமாளி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டேன். அதேநேரம், அசிங்கமாக நடத்துவது, அவமானப்படுத்துவது, துன்புறுத்துவது உள்ளிட்ட சில தொந்தரவுகளை ஏற்க முடியவில்லை. பணியிடத்தில் பெண்களை மோசமாக நடத்து ஆண்கள் மட்டுமல்ல பெண்களும் இருக்கிறார்கள். அங்கு ஒரு சீனியர் பெண்மணி  இதை செய்கிறார். இத்தனைக்கும் அவர் பல ஆண்டுகளாக அனுபவம் உள்ளவர். 3 குழந்தைகளுக்கான தாயான ஒரு பெண்ணை இந்த சமூகம் இப்படித்தான் நடத்துகிறது. கணவர், குடும்பம் என அந்த ஆதரவும் இல்லாமல் வாழ்க்கையில் வெற்றி பெறுவது சில பெண்களுக்கு பிடிக்கவில்லை. பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் பங்கு பெறுபவர்களுக்கு வாழ்த்துக்கள். என்னால் சுரேஷ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேற வேண்டியிருந்தது. அதற்காக வருந்துகிறேன் என தெரிவித்துள்ளார்.

Published by
adminram