தாய்லாந்தில் தனித்தீவில் ரகசியமாக நடைபெற்ற திருமண புகைப்படங்களை தற்போது நடிகை வரலட்சுமி சரத்குமார் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் வைத்துள்ளார். நடிகர் சரத்குமாரின் மூத்த மனைவி சாயா மகளாகப் பிறந்தவர் வரலட்சுமி சரத்குமார்.
ராதிகா சரத்குமாரை திருமணம் செய்து கொண்ட சரத்குமார் ஆரம்பத்தில் வரலட்சுமியுடன் நெருக்கமாக சொந்தம் கொண்டாடாத நிலையில், வரலட்சுமி சரத்குமார் சினிமாவில் அறிமுகமாகி தன்னை நிரூபித்த நிலையில், சரத்குமார் மற்றும் ராதிகா வரலட்சுமியை தங்களது மகளாகவே ஏற்றுக் கொண்டனர்.
வரலட்சுமி சரத்குமார் திருமணத்தையே நடிகை ராதிகா தனது தலைமையில் ஏற்று நடத்திய காட்சிகள் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தின. கடந்த வாரம் திருமண வரவேற்பு சென்னையில் உள்ள லீலா பேலஸில் நடைபெற்றது. தமிழக முதல்வர் ஸ்டாலின், பாஜக தலைவர் அண்ணாமலை, பாரதிராஜா, ஏ.ஆர். ரகுமான், ரம்யா கிருஷ்ணன், பாலகிருஷ்ணா, கிச்சா சுதீப் என ஏகப்பட்ட சினிமா பிரபலங்கள் திருமண வரவேற்பில் கலந்து கொண்டனர்.
அதற்கு முன்னதாக நடைபெற்ற சங்கீத் நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த், திரிஷா, அர்ச்சனா கல்பாத்தி, மீனா, பிரபு ஒரு லிட்டர் சினிமா பிரபலங்கள் பங்கேற்றனர். விஜய், சூர்யா, தனுஷ் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் வரலட்சுமி சரத்குமார் திருமங்கலத்தில் கலந்து கொண்டது போல தெரியவில்லை. நடிகை நயன்தாராவுக்கு வரலட்சுமி அழைப்பு கொடுத்த புகைப்படங்கள் வெளியான நிலையில், அவர் பங்கேற்றது போன்ற போட்டோக்களும் வெளியாகவில்லை.
இந்நிலையில், தாய்லாந்தில் நடைபெற்ற திருமண புகைப்படங்கள் தற்போது வெளியாகி உள்ளன. சமீபத்தில், திருமணத்துக்காக குடும்பத்துடன் தாய்லாந்து கிளம்பிச் சென்ற வீடியோ ஒன்றையும் வரலட்சுமி சரத்குமார் வெளியிட்டு இருந்தார்.
லவ் டுடே, டிராகன், ட்யூட் வெற்றி படங்களை தொடர்ந்து அடுத்து பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் எல்ஐகே வருகிற 10ம் தேதி…
சிம்பு என்றாலே பஞ்சாயத்துதான். ஏனெனில், சிம்பு ஒரு படத்தில் நடிக்கிறார் என்றால் ஒன்று அவர் மூலம் அந்த படத்துக்கு பிரச்சனை…
Serial TRP: தமிழ் சின்னத்திரையில் வெளியாகும் சீரியல்களுக்கான இந்த வார டிஆர்பி அப்டேட் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் சன்…
Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் நடிகர் சிலம்பரசனும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி…
Cook with Comali 7: பிரபல விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சியான குக் வித் கோமாளியில் இனி ஆங்கராக ரக்ஷனுக்கு பதில்…
உலகம் முழுவது சினிமா ரசிகர்களால் கொண்டாடப்பட்ட படம் தி மம்மி. ஆக்ஷன், த்ரில்லர் மற்றும் ஃபேண்டஸி என அனைத்தும் கலந்து…