Categories: latest news

வீர தீர சூரன் பட ரிலீஸ் தேதியில் மாற்றம்? இப்படி குண்ட தூக்கி போடுறாங்களே?

விக்ரம்: தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட 20 படங்களுக்கு பிறகு ஒரு ஹிட் கொடுத்த நடிகர் என்றால் அது விக்ரம். சேது படத்திற்கு முன்பு எத்தனையோ படங்களில் நடித்து அந்த படங்கள் எல்லாம் தோல்வியை சந்திக்க சேது திரைப்படம் தான் அவருக்கு ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியது. அந்த படத்தின் வெற்றி அடுத்தடுத்து சினிமாவில் அவருக்கான இடத்தை வகுத்துக் கொடுத்தது.

சேது படத்திற்கு முன்பு வரை தமிழ் மட்டுமல்ல மலையாளத்திலும் சில படங்களில் நடித்திருக்கிறார். ஒரு செகண்ட் ஹீரோவாக தம்பி கதாபாத்திரமாக என கிடைக்கிற ரோலில் நடித்து சினிமாவில் எப்படியாவது ஒரு நிலையான அந்தஸ்தை அடைய வேண்டும் என கடுமையாக போராடியவர் தான் விக்ரம். ஹீரோ என்றாலே அதற்கு உண்டான ஹீரோயிசம் இருக்க வேண்டும் என்றில்லாமல் வித்தியாசமான கதாபாத்திரங்களை ஏற்று விதவிதமான கெட்டப்பை போட்டு இன்று கமலுக்கு அடுத்தபடியாக நடிப்பில் ஒரு சிறந்த நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார் விக்ரம்.

கெட்டப் மன்னன்: இவர் நடித்த பிதாமகன், காசி, அந்நியன், ஐ போன்ற திரைப்படங்கள் இவர் எப்படிப்பட்ட ஒரு நடிகர் என்பதை காட்டிய திரைப்படங்கள் ஆகும். இந்த திரைப்படங்களில் வித்தியாசமான கேரக்டரை ஏற்று அதற்காக தன்னை வருத்தி நடித்திருக்கிறார் விக்ரம். இந்த நிலையில் இவருடைய நடிப்பில் அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் திரைப்படம் வீரதீர சூரன்.

இந்த படத்தின் டீசர் சமீபத்தில் தான் ரிலீஸ் ஆனது. டீசரை பார்க்கும்பொழுது ஒரு கல்ட் திரைப்படமாக தோன்றுகிறது. நீண்ட நாளுக்கு பிறகு வேட்டி அணிந்து கொண்டு இந்த படத்தில் நடித்திருக்கிறார். அதுவே ரசிக்கும்படியாக இருக்கிறது. இந்த படத்தை அருண்குமார் இயக்கியுள்ளார் .அருண்குமாரை பொறுத்த வரைக்கும் பண்ணையாரும் பத்மினியும் ,சேதுபதி, சிந்துபாத், சித்தா ஆகிய படங்களை இயக்கியவர்.

எதிர்பார்ப்பில் இருக்கும் வீர தீர சூரன்: இந்த படங்கள் அனைத்துமே மக்கள் மத்தியில் நல்ல ஒரு வரவேற்பை பெற்ற திரைப்படங்கள். அந்த வரிசையில் இப்போது விக்ரமை வைத்து வீரதீர சூரன் என்ற திரைப்படத்தையும் இயக்கியிருக்கிறார். இரண்டு பாகங்களாக தயாராகி இருக்கும் இந்த படத்தின் இரண்டாம் பாகம் மட்டுமே முதலில் வெளியாக இருக்கின்றது. இந்த திரைப்படம் பொங்கல் ரிலீஸ் ஆக ஏப்ரல் பத்தாம் தேதி என கூறி வந்தார்கள்.

அதே தேதியில் விடாமுயற்சி திரைப்படமும் வெளியாக இருப்பதால் வீர தீர சூரன் படத்தின் ரிலீஸ் செய்தியை மாற்றலாம் என்ற முடிவுக்கு வந்திருக்கிறார்கள். அதேவேளையில் விடாமுயற்சி படத்தை பொருத்தவரைக்கும் ரிலீஸ் தேதியை அதிகாரபூர்வமாக அறிவித்திருந்தாலும் அந்தப் படத்தின் சில காட்சிகள் இன்னும் படமாக்கப்படவில்லை.

சந்தேகத்தில் விடாமுயற்சி: ஒரு பாடல் காட்சியும் இருக்கிறது. அதனால் விடாமுயற்சி திரைப்படமும் பொங்கலுக்கு வருமா என்ற சந்தேகமும் எழுந்துள்ளதால் விடாமுயற்சி படத்தின் ரிலீஸ் தேதிக்காக வீர தீர சூரன் திரைப்பட டீம் காத்துக் கொண்டிருக்கிறார்கள். சொன்ன தேதியில் விடாமுயற்சி திரைப்படம் பொங்கலுக்கு வரவில்லை என்றால் அந்த தேதியை லாக் செய்து விடுவார்கள் வீர தீர சூரன் திரைப்பட குழு.

ஆனால்பொங்கலுக்கு விடாமுயற்சி வரும் பட்சத்தில் வீர தீர சூரன் படத்தை டிசம்பர் 24ஆம் தேதி ரிலீஸ் செய்யலாம் என்ற முடிவில் இருப்பதாக தெரிகிறது. இதைப் பற்றி கோடம்பாக்கத்தில் சில பேர் பொங்கலுக்கு 10 நாட்கள் விடுமுறை இருப்பதால் ஒரே நேரத்தில் நான்கு படங்கள் வந்தால் என்ன ?ஒரே படத்தையா பத்து நாட்கள் பார்க்கப் போகிறார்கள்? விடாமுயற்சி திரைப்படமும் வீரதீர சூரன் திரைப்படமும் ஒரே நேரத்தில் வந்தால் அப்படி என்ன ஆகிவிடப் போகிறது என புலம்பி வருகின்றனர்.

ராம் சுதன்

Recent Posts

வெறித்தனமா வொர்க் அவுட் பண்ணும் ஜோதிகா!.. சிக்ஸ் பேக் வைக்க போறாரா?!..

மும்பையிலிருந்து கோலிவுட்டுக்கு நடிக்கவந்த நடிகைகளில் ஜோதிகாவும் ஒருவர். அவருக்கு முன் அவரின் அக்கா நக்மா வந்தார். ஜோதிகா பூவெல்லாம் கேட்டுப்பார்…

23 minutes ago

நடிகருக்கு ரஜினி கொடுத்த வாக்குறுதி நிறைவேறல… ஆனாலும் அதை விட பெட்டரா செய்த அந்த உதவி!

வேலைக்காரன் படத்தின் படப்பிடிப்பின்போது என்னுடைய நிறுவனத்திற்காக நீங்கள் ஒரு படம் நடிக்க முடியுமான்னு ரஜினியைப் பார்த்துக் கேட்டார் விகே.ராமசாமி. நிச்சயமாக…

2 hours ago

எம்ஆர்.ராதா நடிகவேள் ஆன கதை… அப்பவே அப்படி ஒரு நடிப்பா?!

நாடக உலகில் எப்படிப்பட்ட சாதனையாளர் எம்ஆர்.ராதா என்பது எல்லோரும் அறிந்த விஷயம். எந்த ஒரு நடிகராக இருந்தாலும் படிப்படியாகத் தானே…

14 hours ago

நான் நன்றாக தமிழ் பேச காரணமே சீமான்தான் – எல்ஐகே நாயகி கீர்த்தி ஷெட்டி நெகிழ்ச்சி

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்க நாதன் நடித்து வருகிற 10ம் தேதி வெளியாகும் படம் எல்ஐகே. தொடர்ந்து ஹாட்ரிக்ல்…

15 hours ago

சிறகடிக்க ஆசை தொடரில் இருந்து வெளியேறுகிறாரா மீனா? வரும் வாரம் நடக்க இருப்பது என்ன?

Siragadikka Aasai: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை தொடரில் இந்த வாரம் நடக்க இருக்கும் எபிசோட் குறித்த…

20 hours ago

என்னது அனிதா சம்பத் டாக்டர் ஆகிட்டாங்களா? இது எப்போ நடந்துச்சு!!

Anitha Sampath: செய்தி வாசிப்பாளராக இருந்த அனிதா சம்பத் தற்போது சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வருகிறார். இவர் தற்போது…

22 hours ago