செம பிரியாணி சாப்பிட்டேன்!.. வைரலாகும் ‘வெந்து தணிந்தது காடு’ ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள்...
இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு ஏற்கனவே ‘விண்ணை தாண்டி வருவாயா’ மற்றும் ‘அச்சம் என்பது மடமையடா’ ஆகிய படங்களில் நடித்தார். தற்போது இருவரும் ‘வெந்து தணிந்தது காடு’ படத்திற்காக மீண்டும் இணைந்துள்ளனர். ஐசரி கணேஷ் தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கவுள்ளார். இது சிம்புவின் 47வது திரைப்படமாகும்.
இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது. இந்த போஸ்டரில் சிம்பு இதுவரை பார்த்திராத தோற்றத்தில் நிற்கிறார். சிம்பு படத்தின் இந்த போஸ்டர் பலரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளது. அதோடு, இதுவரை நகரம் மற்றும் வெளிநாடுகளில் படப்பிடிப்பு நடத்தி வந்த கவுதம் மேனன் முதன் முறையாக கிராம கதையை இயக்கவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு நேற்று திருச்செந்தூரில் துவங்கியது.
இந்நிலையில், இப்படம் தொடர்பான சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. ராதிகா இப்படத்தில் சிம்புவின் அம்மாவாக நடிப்பார் எனத் தெரிகிறது. எனவே, அவரும்,சிம்புவும் அமர்ந்து பேசிக்கொண்டிருக்கும் காட்சியும், கவுதம் மேனன், ராதிகா மற்றும் படக்குழுவினர் அமர்ந்து சாப்பிடும் காட்சியும் இடம் பெற்றுள்ளது. இந்த புகைப்படங்களை ராதிகா சரத்குமார் டிவிட்டரில் பகிர்ந்து ‘இன்று மதிய உணவு மிகவும் அருமை’ என பதிவிட்டுள்ளார். படப்பிடிப்பு என்றாலே மதிய உணவு பிரியாணி என்பது குறிப்பிடத்தக்கது.