Categories: Cinema News latest news

இவர் சொல்றத பார்த்தா வெங்கட் பிரபு அஜித் லிஸ்ட்லயே இல்ல போல! அப்போ அடுத்த படம்?

அஜித்தின் புகைப்படம்:

இணையத்தை திறந்தாலே முழுவதும் அஜித்தின் புகைப்படங்கள்தான் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கின்றன. இதுவரை இல்லாத அளவு அஜித் சில மாடல்களுடன் நின்று போஸ் கொடுக்கும் புகைப்படம் சமீபத்தில் வெளியாகி வருகின்றன. அது எதற்காக எடுக்கப்பட்டது என தெரியவில்லை. ஆனால் ஒவ்வொரு மாடலுடனும் அஜித் நின்று போஸ் கொடுத்திருக்கிறார்.

அந்த புகைப்படம் மிகவும் வைரலாகி வருகின்றது. பட புரோமோஷனுக்கு வரமாட்டேன் என்று சொல்லிவிட்டு இப்படி புகைப்படங்களால் தன்னுடைய படத்திற்கு புரோமோஷன் செய்து வருகிறார். ஆம்.தற்போது அஜித் மிகவும் ஸ்லிம்மாக இருப்பது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியிருக்கிறது. புகைப்படமே இந்தளவுக்கு இருக்கிறது என்றால் படத்தில் எப்படி இருப்பாரோ என்ற ஒரு ஆர்வத்தை இந்த மாதிரி புகைப்படங்கள் ரசிகர்களிடையே ஏற்படுத்தி விடுகிறது.

முடிவடையும் குட் பேட் அக்லி:

ஆகையால் இதுவும் ஒரு வித புரோமோஷன் உத்திதான். தற்போது அஜித் விடாமுயற்சி படத்தை முடித்துவிட்டு அடுத்ததாக 24 ஆம் தேதியில் இருந்து குட் பேட் அக்லி படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ள இருக்கிறார். 4 நாள்கள் மட்டுமே நடக்கும் அந்த படப்பிடிப்பு அதன் பிறகு முழுவதுமாக முடிந்து குட் பேட் அக்லி படமும் போஸ்ட் புரடக்‌ஷன் வேலைகளில் இறங்கி விடும்.

இதற்கு அடுத்த படியாக அஜித் வெங்கட் பிரபுவுடன் இணைவார் என்ற ஒரு தகவல் இருக்கிறது. ஏற்கனவே இவர்கள் கூட்டணியில் மங்காத்தா என்ற ஒரு ப்ளாக் பஸ்டர் படம் வெளியாகி ரசிகர்களிடம் பெருத்த வரவேற்பை பெற்ற நிலையில் மீண்டும் அவர்கள் காம்போ என்பது ரசிகர்களுக்கு ஒரு பெரிய விருந்தாகத்தான் அமையும்.

மீண்டும் வாய்ப்பு இருக்கா?

ஆனால் அதை பற்றி எந்தவித தகவலும் வெளியாகவில்லை. இதற்கிடையில் வெங்கட் பிரபு சமீபத்தில் கூறிய ஒரு தகவல் சோசியல் மீடியாக்களில் வைரலாகி வருகின்றது. மங்காத்தா படத்திற்கு பிறகு அஜித்தை வைத்து மீண்டும் படத்தை இயக்கும் வாய்ப்பு நிறைய முறை வெங்கட் பிரபுவுக்கு வந்ததாம்.

ஆனால் அந்த நேரம் வெங்கட் பிரபு வேறொரு சில கமிட்மெண்ட்டுகளால் அஜித்துடன் இணையவே முடியவில்லையாம். அதனால் இந்த ஒரு காரணத்தினால் அஜித் என் மீது அப்செட்டில் இருப்பார் என வெங்கட் பிரபு கூறியிருக்கிறார்.

Published by
ராம் சுதன்