தனுஷ் முன் விஜய்யை கேலி செய்த நடிகர்: ’அசுரன்’ விழாவில் பரபரப்பு

தனுஷ் நடித்த அசுரன் திரைப்படம் 100 நாட்கள் ஓடியதை அடுத்து இந்த விழாவை மிகச் சிறப்பாகக் கொண்டாட தயாரிப்பாளர் தாணு அவர்கள் முடிவு செய்தார். இதனையடுத்து இன்று சென்னையில் ஏற்பாடு செய்யப்பட்ட ‘அசுரன்’ 100வது நாள் விழா மிகச் சிறப்பாக நடந்தது

ஆனால் இந்த விழாவில் திருஷ்டிப்பட்டது போல் ஒரு ஒரு விரும்பத்தகாத நிகழ்ச்சியும் நடந்தது. இந்த விழாவில் பேசிய பிரபல நடிகர் ஒருவர் ’ஒரு திரைப்படம் 100 நாட்கள் ஓடிய நிகழ்ச்சி நடத்துவது என்பது அரிதாகவே நடப்பதாகவும், எனக்கு தெரிந்து இதற்கு முன்னர் குருவி படத்தின் 150வது நாள் விழாதான் நடந்தது என்றும், ஆனால் அது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை என்று குருவி படம் ஓடியதை கேலியாகப் பேசினார்.

அந்த நடிகர் இவ்வாறு பேசியபோது தனுஷ் கேலியாக சிரித்ததும் அந்த வீடியோவில் பதிவாகி உள்ளது. இதனால் விஜய் ரசிகர்கள் கடுப்பாகி உள்ளனர். இருப்பினும் தனுஷ் பேசியபோது ’ஒரு விழாவில் நாம் பேசுவதை மட்டுமே நம்மால் கட்டுப்படுத்த முடியும் மற்றவர்கள் பேசுவதை நம்மால் ஒன்றும் செய்ய முடியாது. எனவே இந்த விழாவில் நடந்த நல்லவற்றை மட்டும் எடுத்துக் கொண்டு மற்றவற்றை மறந்து விடுங்கள்’ என்று கூறினார். தனுஷ் இவ்வாறு சமாதானம் செய்தாலும், விஜய்யை கிண்டலடித்த நடிகரை அவர் தட்டிக் கேட்காதது குறித்து விஜய் ரசிகர்கள் கடுப்பில் உள்ளதாக கூறப்படுகிறது

Published by
adminram