அஜித் நடிக்கும் விடாமுயற்சி படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப் போவதாக ஒரு பரபரப்பான தகவல் கோலிவுட்டில் ஓடிக் கொண்டிருக்கின்றது. தற்போது அஜித் மகிழ்திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார்.
சில பல பிரச்சனைகளுக்கு பிறகு படத்தின் படப்பிடிப்பு சில தினங்களுக்கு முன்புதான் அஜர்பைஜானில் ஆரம்பிக்கப்பட்டது. அதில் அஜித் ஆரவ் சம்பந்தப்பட்ட சண்டைக் காட்சிகள் படமாக்கப்பட்டன. இதற்கிடையில் திடீரென அஜித் சென்னை வந்திருந்தார்.அதற்கு காரணம் தன் மனைவி ஷாலினிக்கு ஆபரேஷன் செய்திருந்ததால் அவரைப் பார்க்க வந்திருப்பதாக கூறப்பட்டது.
ஆனால் ஆபரேஷன் நடந்த அன்று அஜித்தால் வர முடியவில்லை. ஏனெனில் அங்கு முக்கியமான காட்சி படமாக்க பட்டதால் அதிலிருந்து அவரால் வர முடியவில்லை. அதனால் மறுநாள் கிளம்பி சென்னை வந்திருந்தார் அஜித். இதற்கிடையில் அவர் இன்னும் சென்னையிலேயே இருப்பதாகத்தான் சொல்லப்படுகிறது. மறுபடியும் எட்டாம் தேதி தான் படப்பிடிப்பில் கலந்து கொள்ளப் போகிறாராம்.
தீபாவளி அன்று எப்படியாவது படத்தை ரிலீஸ் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் தான் படப்பிடிப்பில் மும்முரமாக கலந்து கொண்டார் அஜித். ஆனால் இப்போது சென்னையிலேயே அவர் எட்டாம் தேதி வரைக்கும் இருக்க காரணம் என்ன என்பது தற்போது தான் வெளியாகி இருக்கிறது. ஏனெனில் விடாமுயற்சி படத்தின் ரிலீஸ் தேதியை தள்ளி வைத்திருக்கிறார்களாம். தீபாவளி அன்று ரிலீஸ் என சொல்லப்பட்டது.அதன் காரணமாகத்தான் விறுவிறுப்பாக படப்பிடிப்பும் நடந்தது.
இப்போது அந்த தேதி தள்ளி வைக்கப்பட்டு இருப்பதால் தான் அஜர்பைஜானிலிருந்து வந்த அஜித் சென்னையிலேயே தங்கி விட்டார் என்றும் சொல்கிறார்கள். இதற்கிடையில் வேட்டையன் திரைப்படமும், கங்குவா திரைப்படமும் அக்டோபர் 10ம் தேதி ஒரே நேரத்தில் ரிலீஸ் ஆகப்போகிறது என்ற ஒரு தகவலும் வெளியானது. இப்போது விடாமுயற்சி படம் தீபாவளியன்று ரிலீஸ் இல்லை என்று அறிவித்ததும் அந்த தேதியை வேட்டையன் திரைப்படம் லாக் செய்திருப்பதாக சொல்லப்படுகிறது. அதனால் தீபாவளி அன்று வேட்டையன் திரைப்படம் தான் வெளியாகும் என்று கோடம்பாக்கத்தில் கூறி வருகிறார்கள்.
தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் செல்வராகவனும் ஒருவர். அவரது 7ஜி ரெயின்போ காலனி,காதல் கொண்டேன் மற்றும் புதுபேட்டை ஆகிய படங்களை…
தமிழ் சினிமாவில் தற்போது ரீ-ரிலீஸ் ஃபீவர் உச்சத்தில் இருக்கிறது. பல உச்ச நடிகர்களின் படங்கள் ரீ ரிலீ ஸ் செய்யப்பட்டு…
தமிழ் சினிமா ரசிகர்களுக்கு வெள்ளிகிழமை என்றாலே படு கொண்டாட்டம் ஆகிவிடுவார்கள். காரணம் அப்போதிலிருந்தே வெள்ளிகிழமை அன்றுதான் புதிய படங்கள் வெளியாகும்.…
கடந்த சில வருடங்களாகவே தமிழ் சினிமாவில் பெரிய நடிகரின் படங்களுக்கு அனிருத்தே இசையமைத்து வருகிறார். ஏ.ஆர் ரஹ்மானிடம் சென்றவர்கள் கூட…
ஓ மை கடவுளே திரைப்படம் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து. முதல் படமே சூப்பர் ஹிட். அதன்பின்…
நடிகர் அஜித் குமாருக்கு அனுப்குமார் என்கிற அண்ணனும், அனில் குமார் என்கிற தம்பியும் இருக்கிறார்கள்.. இதில் அண்ணன் அனுப் குமார்…