latest news
ஓப்பனிங் கிங் இல்ல… ஓவர்சீஸ் கிங் அஜித்! விடாமுயற்சி படம் செய்த சாதனை தெரியுமா?
ரசிகர்களுக்கு பிடிக்காத காரணம்: கடந்த 6ம் தேதி அஜித் நடிப்பில் வெளியான திரைப்படம் விடாமுயற்சி. அந்த படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. கங்குவா படத்திற்கு எப்படி ஒரு நெகட்டிவ் விமர்சனங்கள் தொடர்ந்து வந்து கொண்டே இருந்ததோ அதேபோல விடாமுயற்சி படத்தை பற்றியும் தொடர்ந்து நெகட்டிவ் விமர்சனங்களை இதுவரை இணையத்தில் பரப்பி வருகிறார்கள். ஆனால் படம் பார்த்தவர்கள் படம் ஹாலிவுட் தரத்தில் இருப்பதாகவும் ஒரு நல்ல கன்டன்ட்டை உள்ளடக்கிய திரைப்படமாக இருப்பதாகவும் ஏன் இந்த படம் ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை என்றும் இந்த அளவு நெகட்டிவ் கமெண்ட்களை கொடுப்பதற்கு என்ன காரணம் என்றும் கூறி வருகிறார்கள்.
அதிகமாக புக் ஆனது: இந்த நிலையில் சினிமா விமர்சகர் செய்யாறு பாலு விடாமுயற்சி படத்தை பற்றியும் அது செய்த சாதனை பற்றியும் ஒரு பேட்டியில் விளக்கி இருக்கிறார். இதோ அவர் கூறியது: என்ன ஒரு எதிர்மறை விமர்சனம் வந்தாலும் சரி படம் சுமாராக இருக்கிறது என்று சொன்னாலும் சரி இந்த படத்தை பார்க்கும் பொழுது ஒரு ஆங்கில படத்தை பார்ப்பது போன்ற ஒரு உணர்வை ஏற்படுத்துகிறது. வெளியாகி ஆறு நாட்கள் ஆகிவிட்டன. இந்த ஆறு நாட்களில் புக் மை ஷோவில் அதிக டிக்கெட்டுகள் புக் பண்ணிய திரைப்படமாக இருப்பது இந்த விடாமுயற்சி திரைப்படத்திற்கு தான்.
இத்தனை ஸ்கிரீனா?: கிட்டத்தட்ட ஒரு மில்லியன் 39 லட்சம் டிக்கெட்டுகள் புக் மை ஷோவில் புக் ஆகி இருக்கிறதாம். இதுவே ஒரு பெரிய வெற்றி. இதையெல்லாம் தாண்டி ஆறாவது நாள் உலகம் முழுக்க 3650 ஸ்கிரீனில் இந்த படம் இன்னும் எடுக்காமல் ஓடிக் கொண்டிருக்கின்றது. ஒருவேளை இந்த படம் சுமாரான படம் என்றால் எந்த ஒரு ஸ்கிரீன்லையும் இந்த படத்தை ஓட விட மாட்டார்கள். உடனே எடுத்து விடுவார்கள். ஆனால் இன்னும் எடுக்காமல் ஓடுகிறது என்றால் இந்த படத்திற்கு உண்டான வரவேற்பை நாம் புரிந்து கொள்ள முடியும். இனி வரும் வாரங்களில் கிட்டத்தட்ட 12 படங்கள் அடுத்தடுத்து ரிலீசுக்கு காத்துக் கொண்டிருக்கின்றன.
முக்கியமான நாள்: அப்படி வந்தாலும் விடாமுயற்சி படத்திற்கு தான் ரிப்பீட் ஆடியன்ஸ்கள் வருவார்கள் என சொல்லப்படுகிறது. இதையெல்லாம் தாண்டி திங்கள்கிழமை என ஒன்று இருக்கிறது. திங்கள் கிழமை என்பது மிகவும் முக்கியமான நாள். ஒரு படத்திற்கு ஆடியன்ஸ்கள் எந்த அளவுக்கு வருகிறார்கள் வரவில்லை என்பதை திங்கள் கிழமை மட்டும் தான் பார்ப்பார்கள். அப்படி திங்கள்கிழமை புக் மை ஷோவிலோ இல்லை மற்ற இணையதளத்திலோ அதிக டிக்கெட்டுகள் புக் ஆகி இருப்பது முதலில் அமரன், இரண்டாவது கோட், மூன்றாவதாக வேட்டையன் ,நான்காவது இடத்தில் விடாமுயற்சி திரைப்படம் இருக்கிறது.
இதையெல்லாம் தாண்டி நியூசிலாந்து ,பிஜி தீவு, ஆஸ்திரேலியா போன்ற இடங்களில் ஒரு ஷோ எல்லாம் போட்டிருக்கிறார்களாம். தமிழர்கள் 300 ,400 பேர் இருந்தால் கூட அந்த இடங்களில் விடாமுயற்சி திரைப்படம் ஒரு ஷோவில் கூட திரையிடப்பட்டிருக்கிறது. அதிலும் குறிப்பாக தமிழர்கள் அதிகம் வாழும் நாடுகளில் முக்கிய நாடாக இருப்பது மலேசியா .அங்கு விடாமுயற்சி படத்தின் கலெக்ஷன் இதுவரை 3.7 மில்லியன் என சொல்லப்படுகிறது.
இதுதான் இந்தப் படத்தின் வெற்றி. ஏனெனில் ஓபனிங் கிங் அஜித் என்பதில் மாற்றமே இல்லை. ஆனால் வந்த தகவல் படி பார்த்தால் ஓவர் சீஸ் கிங் அஜித் என்று சொல்லும் அளவிற்கு இந்த படம் ஓடிக் கொண்டிருக்கின்றது. இதில் மிகைப்படுத்தியோ அல்லது கூடுதலாகவோ சொல்ல வேண்டிய அவசியம் கிடையாது. ஏனெனில் ஒரு படத்தை டார்கெட் செய்து நீங்கள் எதிர்மறையான கருத்துக்களை சொல்லும்போது அது உண்மையிலேயே எதிர்மறையான படமாக இருந்தால் நானே அந்த படத்தை கடுமையாக விமர்சிப்பேன். ஆனால் இந்தப் படத்தை பொருத்தவரைக்கும் இதை விட வேறு எப்படி படத்தை எடுக்க முடியும் என செய்யாறு பாலு கூறினார்.