எப்படியோ ‘விடாமுயற்சி’ டிரெய்லர் வந்துருச்சு.. ஆனா இருக்கிற பஞ்சாயத்து என்ன தெரியுமா?

by ராம் சுதன் |

விடாமுயற்சி டிரெய்லர்: நேற்று ஒரு வழியாக விடாமுயற்சி படத்தின் டிரைலர் வெளியானது. ட்ரெய்லர் வெளியாகி 30 நிமிடத்தில் 10 லட்சம் பார்வையாளர்களைக் கடந்து பெரிய சாதனையை படைத்திருக்கிறது. மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித், திரிஷா, அர்ஜுன், ஆரவ், ரெஜினா என பல நடிகர்கள் நடித்திருக்கும் திரைப்படம் விடா முயற்சி. இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்திருக்கிறார்.

ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்து இருக்கிறார். ஸ்ரீகாந்த் படத்தொகுப்பு மேற்கொண்டு இருக்கிறார் .இந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்து இருக்கிறது. படம் பிப்ரவரி 6ம் தேதி ரிலீஸ் என அறிவித்திருக்கிறார்கள். இதே பிப்ரவரி 7ஆம் தேதி தனுஷின் இயக்கத்தில் தயாராகி இருக்கும் திரைப்படமான நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் திரைப்படம் வெளியாக இருந்தது.

ரிலிஸீல் குளறுபடி: ஆனால் 6ம் தேதி விடாமுயற்சி திரைப்படம் ரிலீஸ் ஆவதால் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் திரைப்படத்தை ஜனவரி 30 ஆம் தேதிக்கு மாற்றி இருக்கிறார்கள். ஏற்கனவே விடாமுயற்சி திரைப்படத்தால் பொங்கலுக்கு வரவேண்டிய திரைப்படங்கள் வரவில்லை. எப்பவோ ரிலீஸ் ஆக வேண்டிய திரைப்படங்கள் பொங்கலுக்கு ரிலீசானது. ஒரே குளறுபடியாகத்தான் இருந்தது.

ஆரம்பத்திலிருந்து ஏகப்பட்ட பிரச்சனைகளுடன் தொடங்கிய விடா முயற்சி திரைப்படம் ஒரு வழியாக முடிந்து 6-ம் தேதி உலகெங்கிலும் ரிலீஸ் ஆக இருக்கின்றது .youtube இல் இதன் ட்ரெய்லர் வெளியாகி 8 மில்லியன் பார்வையாளர்களை கடந்து ட்ரெண்டிங்கில் முதலிடத்தில் இருக்கின்றது. இந்த நிலையில் இந்தப் படம் பிரேக் டவுன் என்ற ஹாலிவுட் படத்தின் ரீமேக் என சொல்லப்பட்டு அந்தப் பட தயாரிப்பு நிறுவனத்திடம் இருந்து எந்த ஒரு காப்பி ரைட்ஸும் வாங்காமல் இந்த படத்தை தயாரித்திருக்கிறார்கள் என்றும் இதை அறிந்த அந்த ஹாலிவுட் பட நிறுவனம் லைக்கா நிறுவனத்திடம் 100 கோடி இழப்பீடாக கேட்டது என்றும் ஒரு தகவல் இருந்தது.

செட்டில்மெண்ட்: இதனால்தான் விடாமுயற்சி படம் ரிலீஸாகுவதில் சிக்கல் இருப்பதாக கூறப்பட்டது. ஆனால் தற்போது வந்த தகவலின் படி இந்த பிரச்சனை ஓரளவுக்கு சரியாகி விட்டது என தகவல் கிடைத்துள்ளது. அதாவது 10 கோடி முன்பணமாக அந்த ஹாலிவுட் பட நிறுவனத்திற்கு கொடுக்கப்பட்டு விட்டதாம். மீதி தொகை ப்ராபிட் ஷேர் என்ற அடிப்படையில் கொடுக்க உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

Next Story