வீடியோ கால் பேசிக்கொண்டு இருந்தவரை சுட்ட…? – பாஜக பெண் பிரமுகருக்கு நடந்த விபரீதம் !

அரியானா மாநிலத்தில் தனது சகோதரியுடன் வீடியோ கால் பேசி கொண்டிருந்த பெண்ணை அவரது கணவர் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்துள்ளார்.

அரியானா மாநிலத்தைச் சேர்ந்த தம்பதிகள் சுனில் கோத்ரா மற்றும் முனைஸ். முனைஸ் பாரதிய ஜனதா கட்சியில் நிர்வாகியாக செயல்பட்டு வருகிறார். இது அவரது கணவருக்குப் பிடிக்கவில்லை. தன் மனைவி வேறு ஒருவருடன் கள்ளத்தொடர்பில் இருப்பதாக சுனில் சந்தேகப்பட்டுள்ளார்.

இந்நிலையில் முனைஸ் தனது சகோதரியுடன் வீடியோ கால் பேசிக்கொண்டு இருந்த போது ஆத்திரத்தில் துப்பாக்கியை எடுத்து இருமுறை அவரை சுட்டுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே முனைஸ் இறந்துள்ளார். இதையடுத்து சுனில் கோத்ராவை கைது செய்த போலிஸார் அவரை விசாரணை செய்து வருகின்றனர்.

Published by
adminram