மனிதம் வாழட்டும்!….சாதித்த குவாடன்.. வைரலாகும் வீடியோ

Published on: February 23, 2020
---Advertisement---

a2d0e0ed6cf37258ee1c785059f93017

ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரத்தில் வசித்து வருபவர் யர்ராகா பேல்ஸ். இவரின் 9 வயது மகன் குவாடன் மரபணு நோயால் பாதிக்கப்பட்டு உடல் வளர்ச்சி குன்றி கானப்படுகிறான். சிறுவனின் தோற்றத்தைக்கண்டு உடன் படிக்கும் மாணவர்கள் கிண்டலடிப்பதால் குவாடன் மிகவும் மனமுடைந்து போனான். 

இதையடுத்து, தனது தாயிடம் தான் சாக விரும்புவதாகவும் தூக்கு கயிறு அல்லது கூர்மையான பொருள் எதாவது கொடுங்கள் என சிறுவன் கதறுகிறார். ஆனால், அவனுக்கு அவரின் தாய் ஆறுதல் கூறுகிறார். மேலும், உருவக் கேலி செய்யப்படுபவர்கள் எப்படி வேதனைப்படுவார்கள் என்பதை உலக்கு காட்ட நினைத்த அவரின் தாய் அப்போது எடுத்த வீடியோவை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டார்.

இந்த வீடியோ வைரலாந்து. லட்சக்கணக்கானோர் இதை பார்த்தனர். அவர்கள் குவாடனுக்கும் நம்பிக்கையூட்டும் படியான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். பலரும் குவாடனுக்கு ஆதரவாக களம் இறங்கி இந்த வீடியோ பகிர தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. 

மேலும், தேசிய ரக்பி கால்பந்து போட்டியின் போது சிறுவன் குவாடனை விளையாட்டு மைதானத்திற்குள் வரவழைத்து கவுரப்படுத்த விரும்புவதாக அந்த வீரர்கள் தெரிவித்திருந்தனர். 

தற்போது கூறியபடியே சிறுவன் குவாடனை அவர்கள் அணியும் டீ சர்ட்டை அணிய வைத்து மைதானத்திற்குள் அழைத்து வந்தனர். இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.

Leave a Comment